ராணுவப் பணியின் போது உயிரிழந்த மேஜர் ஒருவரின் மனைவி தன் வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்!
கடந்த வாரம் பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய கார் CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ராணுவப் பணியின் போது உயிரிழந்த மேஜர் ஒருவரின் மனைவி தன் வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்திச் சேர்ந்த கவுரி சட்டப் படிப்பை முடித்தவர். இவர் பிரசாத் மஹாதிக் என்ற ராணுவ மேஜரை திருமணம் செய்திருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்தில் உயிரிழந்தார்.
#WATCH: Late Army Major Prasad Mahadik's wife Gauri Mahadik, who will join Indian Army next year, says, "he always wanted me to be happy & smiling. I decided I'll join the forces, I'll wear his uniform, his stars on our uniform. Our uniform because it will be his and my uniform". pic.twitter.com/vrCGdn5ZfA
— ANI (@ANI) February 24, 2019
கணவனை இழந்த பின் சோகத்தில் ஆழ்ந்திருந்த கவுரி, தாய் நாட்டைக் காக்கும் தமது கணவரின் துறையையே தாமும் தேர்ந்தெடுத்துள்ளார். ராணுவத்தில் சேர்வதற்கான SSB தேர்வை முதன் முறையாக எழுதி தேர்ச்சி பெறத் தவறிய கவுரி, விடாப்பிடியாக படித்து தம்மைப் போன்றவர்களுக்கான பிரிவில் முதல் மதிப்பெண் பெற்றார்.
வரும் ஏப்ரல் மாதம் சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சியில் சேரவுள்ள அவர், அடுத்த ஆண்டு லெஃப்டினன்ட் ஆக ராணுவத்தில் இணைகிறார்.
Gauri Mahadik: 10 days after his demise, I was thinking about what should I do now. I decided that I've to do something for him & that I'll join the forces & wear his uniform & his stars. I will join Army next year as a lieutenant after hardcore training at OTA in Chennai. pic.twitter.com/9LYkb9P9kz
— ANI (@ANI) February 24, 2019