சென்னை: 3 ஆண்டுகளாக அரசு தேர்தல் நடத்தப்போவதாக அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்திற்கு போவதுமாக, அதிமுக மற்றும் திமுக சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு நடந்திக்கொண்டு இருக்கிறது எனக்கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளரான குமரவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ஆளும் கட்சி தான் முக்கிய காரணம் என்றும், அதற்கு எதிர்கட்சி துணை போகிறது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 


 



தமிழ் நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்று வரை நடத்தப்படததால், அடிப்படை  வசதிகள் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள், தங்கள் பிரச்சனைகளை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததது தான்.


இந்த நிலையில், ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலை பற்றி எந்த கவலையும் இல்லாமல், இரு கட்சிகளும் தங்கள் சுயநலத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.


கடந்த மூன்றா ஆண்டுகளாக' "புலி வருது புலி வருது'" என்பது போல் அரசு தேர்தல் நடத்தப்போவதாகவும் அறிவிப்பதும், அதன் பிறகு அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்துக்கு போவதும் என உள்ளாட்சி தேர்தலை வைத்து கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தி வருகின்றனர்.


ஒருபக்கம் தேர்தல் நடத்தப்படுவதாக பாவனைக் காட்டி தனது கட்சிக்காரர்களிடம் விருப்பமனு பெறுவதும், மற்றொருபுறம் தேர்தலுக்கு தடை போட நீதிமன்ற வாசலில் நிற்பதும் என இதுவரை மக்களை மட்டும் ஏமாற்றி வந்த வந்த இரண்டு கட்சியும் (திமுக - அதிமுக), இப்போது தங்கள் கட்சிக்காரர்களையும் ஏமாற்றி வருவதையே காட்டுகிறது.


தமிழக மக்கள் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில், இந்த இரண்டு கட்சிகளையும் அடையாளம் கண்டு, புறகணிப்பது தான் உண்மையான மக்களாட்சி உருவாதற்கு வழி ஏற்படும் என மக்கள் நீதி மையம் நம்புகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளரான குமரவேல் கூறியுள்ளார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.