வெளிநாட்டில் வேலை.. கோவையில் லட்சக் கணக்கில் மோசடி.. ஒருவர் கைது!

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கோவையில் லட்சக் கணக்கில் மோசடி செய்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Written by - R Balaji | Last Updated : Apr 12, 2025, 09:25 PM IST
  • வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர்.
  • கோவையில் லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
வெளிநாட்டில் வேலை.. கோவையில் லட்சக் கணக்கில் மோசடி.. ஒருவர் கைது!

கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தகராறு நடப்பதாக பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரித்தனர். இதில் திண்டுக்கலை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி ரூ.1 லட்சம் கொடுத்ததாகவும், போலி பணி ஆணை கொடுத்ததால், பணத்தை திரும்பி கேட்டபோது தராமல் மோசடி செய்ததாகவும் கூறினர்.

Add Zee News as a Preferred Source

உடனே மோசடி செய்ததாக கூறப்படும் நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் பரமக்குடியை  சேர்ந்த பாரதிராஜா என்பதும், அவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் லட்சக் கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ. 6 லட்சத்து 40 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிராஜா கூட்டாளி செந்தில் மீதம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றன.

இது குறித்து போலீசார் கூறும்போது, கைதான பாரதிராஜா சொந்தமாக லாரி வாங்கி ஒட்டியதில் நஷ்டம் அடைந்ததால், கோவை வந்து கார் டிரைவராக வேலை பார்த்து உள்ளார். அப்போது அவருக்கு கோவையை சேர்ந்த செந்தில் என்பவர் அறிமுகமானார். அவர் பாரதிராஜாவிடம் வெளிநாட்டில் வேலை தெரிந்த இளைஞர்களை குறி வைத்து ஒரே நாளில் லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளார். 

அதன்படி சின்னியம்பாளையத்தில் அலுவலகம் அமைத்து ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி உள்ளனர். பின்னர் அவர்கள் ஆன்லைனில் சிங்கப்பூரில் வேலை தேடும் 500 பேரில் தொலைபேசி எண்களை சேகரித்து தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். பின்னர் அந்த பெண் மூலம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி உள்ளனர். அதை நம்பி 93 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களிடம் பாரதிராஜா பாஸ்போர்ட், கல்வி சான்று உள்ளிட்ட  ஆவணங்களின் நகலை வாட்ஸ் அப் & கொரியர் மூலம் அனுப்ப கூறியுள்ளார். பின்னர் அவர்களிடம் வேலைக்கு தேர்வு ஆகி விட்டதாகவும் ஆன்லைனில் ஏப்ரல் 1ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் மே 1 ஆம் தேதி சிங்கப்பூரில் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளார். 

அதற்கான முதலில் ரூ. 1 லட்சத்தை பத்தாம் தேதி நேரில் வந்து செலுத்த வேண்டும். மீதி ரூ. 2 லட்சத்து 75 ஆயிரத்து இரண்டு வருட சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்று பாரதிராஜா கூறி உள்ளார். இதற்காக நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் மண்டபத்தில் வாடகைக்கு எடுத்து உள்ளனர். அங்கு விண்ணப்பம் செய்த 93 பேரில் 46 பேர் நேரில் வந்து உள்ளனர்.

அவர்களுக்கு மண்டபத்தில் காலை, மத்திய உணவு வழங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து 46 பேரும் ரூ. 1 லட்சத்தை பாரதிராஜாவிடம் கொடுத்து உள்ளனர். உடனே அந்த 46 பேருக்கும் போலி பணி ஆணை வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதை பார்த்து சந்தேகம் அடைந்த திண்டுக்கலை சேர்ந்த ஸ்ரீதர் தான் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளார்.  இதனால் பாரதிராஜா கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். தலைமறைவான செந்திலை வலைவீசி தேடி வருகின்றோம் என்றும் காவல் துறையினர் கூறினர்.

மேலும் படிங்க: Gpay, Paytm பயனர்கள் ஷாக்... பணப் பரிவர்த்தனையில் சிக்கல் - என்ன தான் ஆச்சு?

மேலும் படிங்க: தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை மழை வெளுக்கும்.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News