)
Ajithkumar Lockup Death: சிவகங்கை திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில் பத்ரகாளி அம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர், காவலாளி அஜித்குமார் (27). அந்த கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அவரது காரை பார்க்கிங் செய்யும்படி கூறி அஜித்குமாரிடம் சாவி கொடுத்துள்ளார். காரை பார்கிங் செய்தபின் சாவியை மீண்டும் அவரிடமே கொடுத்துள்ளார்.
அதன்பின் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பக்தர் காரில் சென்று பார்த்தபோது காரில் இருந்த 10 பவுன் நகை உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பக்தர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அஜித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணையின் போது அஜித்குமார் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மேலும், மடப்புரம் கோவில் அலுவலகம் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் நகையை ஒளித்து வைத்திருப்பதாக அஜித் கூறியதால் போலீசார் அங்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், இந்த மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீசார் அஜித்குமாரை கடுமையாக தாக்கி உள்ளனர். மாட்டுக்கொட்டகையில் போலீசார் அஜித்குமாரை தாக்கும் வீடியோவும் ஊடகங்களில் வெளியானது. தற்போது வீடியோ எடுத்தவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவர் கழிவறையில் மறைந்திருந்து அந்த வீடியோவை எடுத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபோன்று கடுமையாக தாக்கியதால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.
அதில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. அஜித்குமார் கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடலை உடற்கூராய்வு பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அஜித்குமார் காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில் இருந்து அஜித்குமார் தப்பிக்க முயன்றபோது அவர் கீழே விழுந்தார் எனவும் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
உடனே அஜித்குமாரை சிவகங்கை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதால், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். அப்போது ஜூலை 28ஆம் தேதி சுமார் இரவு 11.15 மணியளவில் மருத்துவர் பரிசோதித்ததில் அஜித்குமார் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. 5 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட சிவகங்கை எஸ்பி ஆஷித் ராவத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தீஷ், சிவகங்கை மாவட்ட எஸ்.பி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரேஷ்குமார் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை இடைநீக்கம் செய்து தென்மண்டல ஐஜி பிரேம் சின்கா உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ