ஏப்ரல் 2ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரியத் திருத்த மசோதா இந்தியா முழுவதும் பெரிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதற்கு பலதரப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டியது. இந்த சட்டம் நாடு முழுவதும் உள்ள முஸ்லீம் சமூகங்களில் இருந்து பரவலான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது, அவர்கள் தங்கள் நலனுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கவலைகளை வெளிப்படுத்துகின்றனர். தொண்டு மற்றும் சமூக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை அநியாயமாக அபகரிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று வாதிடுகின்றனர். இந்த வலுவான எதிர்ப்பின் மத்தியில் தமிழக அரசு இதற்கு எதிராக மசோதா நிறைவேற்றி உள்ளது.
மேலும் படிங்க: சமையல் சிலிண்டர் திடீர் விலை உயர்வு... உச்சக்கட்ட ஷாக்கில் மக்கள்!
மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி தங்களது பேஸ்புக் பக்கத்தில் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். "இஸ்லாமியர்களுடைய சொத்துக்களை அபகரிக்கின்ற நோக்கத்தோடு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இம்மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத் திருத்ததிற்கு எதிராக சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலுவாக களமாடி வருகின்றது. இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஆதரவாக தொடர்ந்து போராடும் விசிக நிறுவனர் - தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து, "நபிகள் நாயகம் வரலாறு" புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று
இச்சந்திப்பின்போது மஜக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் கா.அ.மு.சைஃபுல்லா, மாநிலத் துணைச் செயலாளர் தாங்கல் A.S. தாரிக் முகமது, வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் கபீர் அகமது, திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் அபூபக்கர், வடசென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் செரியன் நகர் ஜலில், திருவொற்றியூர் தொகுதிப் பொருளாளர் அருண், துறைமுகம் தொகுதி மாணவர் இந்தியா துணைச் செயலாளர் நவீத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் படிங்க: கழிவறைக்கு காலனி பயன்படுத்த கூடாது! மீறினால் தண்டனை - அரசு பள்ளியில் நடக்கும் அவலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews









