மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்... பால்வளத்துறை ஒதுக்கீடு!

Minister Mano Thangaraj: கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏவான மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு பால்வளத்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது.  

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2025, 07:11 PM IST
  • செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் ராஜினாமா
  • மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்ப்பு
  • அமைச்சரவையில் இலாக்கா மாற்றமும் நடந்துள்ளது.
மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்... பால்வளத்துறை ஒதுக்கீடு!

Tamil Nadu Cabinet Changes: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

TN Cabinet Changes: செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலைவாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதாகி சிறை சென்றிருந்தார்.

TN Cabinet Changes: செந்தில் பாலாஜி வழக்கு

சுமார் ஓராண்டு காலம் சிறையில் இருந்த அவர், சிறையில் இருந்து வெளிவந்த அடுத்த நாளே மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இவர் மீதான ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுதான் இவருக்கு மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையில், உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமின் வேண்டுமா என்பதை முடிவுசெய்துகொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையொட்டியே அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் முடித்துவைத்து இன்று உத்தரவிட்டது. அதேபோல், அமைச்சர் பொன்முடியும் பொதுவெளியில் சர்சைக்குரிய விதத்தில் பேசியது பெரும் கண்டனங்களை எழுப்பியது. அவரது கட்சிப் பொறுப்பு உடனடியாக பறிக்கப்பட்டாலும் அமைச்சர் பொறுப்பு மட்டும் அவர் வசமே இருந்தது. இதையொட்டி, பொன்முடியும் அவரது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

TN Cabinet Changes: மனோ தங்கராஜ் பதவியேற்பு

இந்நிலையில், இவர்களின் இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அமைச்சரவையில் மீண்டும் பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜூக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மனோ தங்கராஜூக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அவருக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TN Cabinet Changes: இலாக்கா மாற்றம் 

மேலும், தமிழ்நாடு அமைச்சரவையிலும் சில இலாக்கா மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறை, எஸ்.எஸ். சிவசங்கரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் போக்குவரத்துறையோடு, மின்சாரத்துறையையும் கவனித்துக்கொள்வார். 

அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை முத்துசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் ஏற்கெனவே வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளது. இதுவரை பால்வளத்துறையை கவனித்து வந்த ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இனி பொன்முடியின் வனத்துறையை கவனித்துக்கொள்வார்.

மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வு... தமிழக அரசு அதிரடி - அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகள்

மேலும் படிக்க | டிவியில் வருவதற்கு என்ன வேணாலும் பேசலாமா? திருமாவை கண்டித்த நயினார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News