குருதி கொடையில் சாதனை படைக்கும் MBlood பற்றி தெரியுமா?
பயனர்களின் இடம் அறிந்து தேவையான குருதி(Blood) வழங்கும் MBlood மொபைல் செயலியானது, 27000 பயனர்களை எட்டியுள்ளது!
சென்னை: பயனர்களின் இடம் அறிந்து தேவையான குருதி(Blood) வழங்கும் MBlood மொபைல் செயலியானது, 27000 பயனர்களை எட்டியுள்ளது!
அத்தியாவசிய நேரங்களில் குருதி தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் இடம் அறிந்து, அருகில் இருக்கும் குருதி கொடை வழங்குபவர்களை அறிமுகம் செய்து வேண்டிய நேரத்தில் அவர்களுக்கான குருதியினை வழங்கும் சேவையினை MBlood செயலி செய்து வருகிறது.
இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் SPPLJ Charitable Trust மூலம் இந்த செயலி வழிநடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த செயலியின் செயல்பாடுகளை மேம்படுத்து ரூ.50 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து MBlood நிறுவனத்தின் நிருவனர் சுஷில் லால்வானி தெரிவிக்கையில்,. "குருதி வங்கிகளையும், மருத்துவர்களையும், குருதி கொடையாளர்களுடன் இணைப்பதே எங்கள் பணியாகும். சாமானியருக்கும் குறைந்த விலையில் தேவையான சேவையினை தரமாக வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்" என தெரிவித்துள்ளார்.
MBlood செயலி மூலம் வழங்கப்படும் சேவையானது இலவசமான ஒன்றாகும். இந்த செயலியில் குருதி கொடையாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துக்கொண்டால், குருதி தேவைப்படுபவர்கள் இவர்களை தொடர்புக்கொள்ள எளிதில் வழி வகுக்கிறது.
MBlood பற்றி சில....
இந்த செயலியானது தற்போது Android போன்களுக்கும் கிடைக்கிறது.
ஆயிரத்திற்கு மேற்பட்ட குருதி கொடையாளர்களை இரண்டே படிகளில் இணைக்கிறது.
MBlood ஆனது, குருதி தேவையாளர்களுக்கு தேவையான குருதியினை உறுதியான நேரத்தில் வழங்கி உதவுகிறது
MBlood வழங்கும் சேவைக்கும் பயனர்களிடம் இருந்து எந்த வித கட்டணங்களும் வசூளிக்கப்படுவதில்லை