)
Melur Murder Accident : மேலூர் அருகே அய்யாபட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்தி ஒருவர் கொலை : மகள் காதல் திருமணம் செய்த நிலையில் பெண்ணின் தரப்பினர் வெறிச் செயல்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலம், பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (21). இவர் ராகவி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். (ராகவிக்கு ஏற்கனவே திருமணம் நிகழ்ந்து கணவர் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்)
இந்நிலையில் ராகவியின் திருமணத்திற்கு அவரின் பெற்றோர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சதீஷ்குமார், ராகவி இருவரும் திருச்சியில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று விட்டதாக ராகவியின் தந்தை மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நேற்று இரு தரப்பினரிடம் காவல்துறையில் மேலூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். மேலும் இன்று விசாரணைக்கு வருமாறு இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சதீஷ்குமார் மற்றும் ராகவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இரவில் அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்ற போது, பின்னால் காரில் தொடர்ந்து வந்த ராகவியின் பெற்றோர் தரப்பினர் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இதில் இருவரும் கீழே விழுந்தனர். பின் காரில் இருந்த நபர்கள் சதிஷ்குமார் மற்றும் ராகவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்த போது சதீஷ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், ராகவி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண்ணின் சகோதரன் மற்றும் உறவினர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ