Tamil Nadu Government News : மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) செயல்படுத்தி வருகிறது. இதனை MGNREGA என சுருக்கமாக கூறுவார்கள். ஏழை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும், அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் இது. இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் மோசடி நடைபெற்றுள்ளதாக பல ஊர்களில் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்து கொண்டிருக்கின்றன.
100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்து இடையில் ஒரீரு நாட்கள் பணிக்கு வராதவர்களின் பெயர்களில் எல்லாம் சம்பளம் போட்டு பொறுப்பில் இருப்பவர்கள் பணம் எடுத்துக் கொள்வதாகவும், 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒருபோதும் வராதவர்களின் பெயர்களின் கார்டு போட்டு, அவர்களுக்கு சம்பளமும் அரசிடமிருந்து பெற்று, அந்த நபர்களுக்கு கமிஷன் அடிப்படையில் தொகையை கொடுத்துவிட்டு பெரும் தொகையை எடுத்துக் கொள்வதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் சொல்லப்படுகிறது. சில ஊர்களில் புது ரகமான மோசடிகள் எல்லாம் நடைபெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிடுள்ளார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடக்கும் புகார்கள் குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதற்காக தனி சிறப்பு அதிகாரியை நியமித்திருக்கும் மாவட்ட ஆட்சியர் புகார்கள் தெரிவிக்க இலவச மொபைல் எண் ஒன்றையும் கொடுத்துள்ளார். இந்த திட்டத்தில் நடைபெற்றிருக்கும் அல்லது நடைபெறும் மோசடிகள், குறைகள் குறித்து பொதுமக்கள் இந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். வாய்ப்பு இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு : மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு குறைதீர்ப்பாளராக அருள்பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு குறைதீர்ப்பாளராக அருள்பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க மாவட்ட குறைதீர்ப்பாளரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9976558777 என்ற அலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: "ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார்".. உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!
மேலும் படிங்க: தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ