தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் கலந்து கொண்டு 506 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன்,
கல்வியும் மருத்துவமும் இரண்டும் இரண்டு கண்கள் என்று நம்முடைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி காலம் தொட்டு அனைவருக்கும் கல்வி கிடைத்து வருகிறது, ஆனால் அந்தக் கல்வி தரமான கல்வியாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்முடைய முதல்வர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.
கல்வி முடித்துச் செல்லும் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் திறம்பட பணியாற்றும் வேண்டும் என்பதற்காக என்னும் எழுத்தும், வானவில் ஆயிரம், திறன் மேம்பாட்டு பயிற்சி, நான் முதல்வன் திட்டம் என பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
குறிப்பாக மாணவர்கள் நான் முதல்வன் திட்டம் மூலமாக தங்களுடைய எதிர்கால திட்டங்களை செயல்படுத்திக் கொள்ளும் அளவிற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் உயர்கல்வி முடித்த பிறகு வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கும், தற்போது தமிழக அரசு உதவி செய்கிறது. இதில் தற்போது 326 மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர் மேலும் இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது.
முன்பெல்லாம் ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டுமே டிவி இருக்கும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது வீட்டிலும், கையிலும் டிவி (மொபைல்) உள்ளது. அதனை பார்ப்பதை மாணவர்கள் குறைக்க வேண்டும். இந்த மொபைல் போன் பார்க்கும் போது சுய கட்டுப்பாடு அவசியம். மேலும் நம்முடைய மனதை மாணவர்கள் ஒருபோதும் அலைபாய விடக்கூடாது.
சமூக ஊடகங்கள் மூலமாக பெண்கள் நிறைய பேர் ஏமாற்றப்படுகின்றனர். தயவுசெய்து சமூக ஊடகங்களில் பார்ப்பதை ஒருபோதும் நம்ப வேண்டாம். பெற்றோர் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்று இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். AI தொழில்நுட்பம் வந்த பின்னர் நிறைய பொய்யான செய்திகள் உலவி வருகிறது. இதனால் மாணவர்கள் கண்டிப்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாறாக உங்களுக்குத் தேவையான தகவலை நீங்கள் Googleலில் மட்டுமே தேடி எடுத்துக் கொள்ளுங்கள்.
போட்டோ போன் எண் உங்களைப் பற்றி எதையும் பதிவிடாதீர்கள். பதிவு செய்தால் அது பெண்களுக்கு கெடுதலாக வருகிறது. அதேபோல் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். அதேநேரம் கவனமாகவும் இருக்க வேண்டும், எதையும் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்.
பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள். பெண்களுக்கு ஊட்டச்சத்து என்பது மிகவும் அவசியம். அப்போதான் ஆண்களுக்கு இணையாக பணி செய்ய முடியும். உடல் உறுதியாக இருக்க வேண்டும். சிப்ஸ் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும். மாறாக பழங்கள் கீரைகள் தானிய வகைகளை சாப்பிட வேண்டும்.
பொதுவாக டீன் ஏஜ் வயதில் ஹார்மோன் மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வயதில் ஹார்மோன் தாக்கம் இருக்கும். எதிர் பாலினத்தை பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு வரும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். டீன் ஏஜ் வயதில் மாணவிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.
AI தொழில்நுட்பத்தை நாம் தான் இயக்க வேண்டும். கற்க கசடற என எல்லாவற்றையும் படியுங்கள், மதிப்பெண்ணிற்காக படிப்பதாக நினைக்கக் கூடாது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள நன்றாக படிக்க வேண்டும். மூளை என்னும் ரேமில் எல்லாவற்றையும் பதிவு செய்து கொள்ளுங்கள் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
டீன் ஏஜில் மனதை அலைபாய விடக்கூடாது. காதல் என்று சொல்லி எதையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது. டீன் ஏஜ் முடிவடைந்து 19 வயதுக்கு மேல் காதல் என்பதை பார்த்துக் கொள்ளலாம். ஹார்மோன் மாற்றம் காரணமாக தவறான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். பாதை மாறிவிடக்கூடாது. மிகவும் கவனமாக பெண்கள் இருக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | மக்களே லாஸ்ட் சான்ஸ்.... SIR காலக்கெடு நீட்டிப்பு - எத்தனை நாள்களுக்கு?
மேலும் படிக்க | அதிமுக உடன் கூட்டணி இல்லை...? - தவெக நிறைவேற்றிய 4 தீர்மானங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









