)
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் தனியார் அமைப்பான புதுக்கோட்டை பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப் சார்பில் கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் விதத்தில் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஒன்று சேர்ந்து அந்த பகுதி முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை 12 வருடங்களுக்கு முன்பு நட்டு வைத்து பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் விளையாட்டு மைதானம் சுற்றி தற்பொழுது நடைப்பயிற்சியில் ஈடுபடும் பொதுமக்களுக்கு காலை மாலை வெயில் காலங்களில் குடை போல் நிழல் தரக்கூடிய புங்கை மரம், மகாகனி மரம், அரசமரம் , இலுப்பை மரம், வேப்பமரம், பாதாம் மரம், நாவல் மரம், தூங்கு மூஞ்சி மரம், உள்ளிட்ட பல்வேறு மரங்கள் தற்பொழுது சுமார் 15 ,20 அடி உயரம் ஓங்கி வளர்ந்து நிற்பதால் அந்த மரங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என நினைத்த நடை பயிற்சி ஈடுபடும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று புதுக்கோட்டை மாவட்டகலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் வளர்ந்திருக்கும் பல்வேறு வகையான மரங்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் தங்களுடைய இல்லத்தில் எப்படி ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறுமோ அதேபோல் தாம்பாள தட்டில் மலர்களை வைத்து குடங்களில் தண்ணீர் எடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்க மைதானத்தைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று மரங்களுக்கு தண்ணீரை ஊற்றி மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்தார்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்.,
மரங்களுக்கு மரியாதை செய்வது என்பது புதிதல்ல. நம் முன்னோர்கள் அனைவருமே மரங்களுக்கு அப்போதிலிருந்து மரியாதை செய்து வருகின்றனர். உலகத்திலேயே நமக்கு உதவி செய்யும் அனைத்து இயற்கையையும் தெய்வமாக நினைத்து வணங்கி அதனை வழிபட்டவன் தமிழன் ஒருவன் தான். அதை நான் தற்போது பின்பற்றி செய்து வருகின்றோம். மரங்களை வளர்த்தால் தான் ஆக்சிஜன் அதிகமாக கிடைக்கும் மேலும் எந்தெந்த மரத்தில் எவ்வளவு ஆக்சிஜன் கிடைக்கும் என்பதையும் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் தன்னுடைய பிறந்தநாளில் கட்சி நிர்வாகிகள் ஏதாவது நிகழ்ச்சி செய்யலாம் என்று கேட்ட பொழுது அது போன்ற நிகழ்ச்சிகள் செய்ய வேண்டாம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை செய்வோம் எனக் கூறிய பனை விதைகள் நடும் நிகழ்வாக மாவட்ட முழுவதும் பண விதைகள் நடும் நிகழ்வை துவக்கி நடத்தியுள்ளோம். குறிப்பாக என்னுடைய ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தற்பொழுது 10 ஆயிரத்து மேற்பட்ட பண விதைகள் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு நடப்பட்டுள்ளது. பனைமரம் மட்டும்தான் மழை பெய்வதை சேமித்து விவசாயிகளுக்கு மழையை தரும் நாடு முழுவதும் பத்து கோடி பனை மரங்கள் இருந்தால் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து கோடி பனை மரங்கள் இருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு இல்லாமல் பனை மரங்களில் யாரும் வெட்டக்கூடாது என உத்தரவு போட்டவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எனவே நாம் அனைவரும் மரங்களை பாதுகாப்போம் மரங்களை நடும் பொழுது அந்த மரத்தின் ஆணி அடிக்கக் கூடாது என நான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த பொழுது உத்தரவிட்டுள்ளேன். அதுபோன்று மரத்தின் ஆணி அடித்த பொழுது அந்த ஆணிகளை பிடுங்கி எடுக்க நடவடிக்கையும் எடுத்தேன் அதனால்தான் தற்பொழுது மரங்களின் ஆணியடிக்காமல் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது மேலும் நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாடு முழுவதும் என்னுடைய அமைச்சரவையின் கீழ் இயங்கப்படும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் குறுங்காடுகளை கண்டிப்பாக அமைக்க வேண்டும் என உத்தரவிட்டேன். அதன்படி இன்று பல்லாயிரம் குறுங்காடுகளை அமைக்கப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சியில் பேசினார் இந்த நிகழ்வில் பெஸ்ட் வாக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு தொண்டு அமைப்பினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ