)
Kalaignar Magalir Urimai Thogai : அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மகளிர் உரிமைத்தொகை மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்த முக்கிய தகவலை தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த பெண்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என கூறிய அவர், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் சக்கரபாணி பேட்டி
தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, " குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுயில் 7,704 நபர்கள், பழனி சட்டமன்ற தொகுதியில் 2433 நபர்கள் என மொத்தம் 10,137 நபர்களிமிருந்து மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை, இலவச மின்சாரம்
தகுதியான அனைத்து நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். தற்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் அறிந்து, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். விவசாயிகளுக்கு இதுவரை 2 இலட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்படவுள்ளது." என அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை என அவர் தெரிவித்தார்.
புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள்
மேலும், அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கூறினார். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ