)
Sekar Babu Criticized Vijay: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பயணித்து வருகிறார். கட்சியின் முதல் மாநாட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்திய விஜய், 2வது மாநில மாநாட்டை மதுரை பாரபத்தியில் நடத்தி உள்ளார். முதல் மாநாட்டில் இருந்தே திமுக மற்றும் பாஜகவை விஜய் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தூய்மை பணியாளர்கள் விவகாரம், ஆணவக் கொலை உள்ளிட்டவைகள் குறித்து பேசாத விஜய், திமுகவை மட்டுமே குறிவைத்து பேசினார். குறிப்பாக இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என கூறி கிண்டல் செய்தார். விஜய் ஸ்டாலினை அங்கிள் என கூறியது சர்ச்சைக்குறியதாக மாறியது. திமுக அமைச்சர்கள் பலரும் விஜய்யை கடுமையாக சாடி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் சேகர் பாபு, இன்னும் 2, 3 மாநாடு நடத்தினால், காலி பெருங்காய டப்பாவாக மாறிவிடுவார் என கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய சேகர் பாபு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இதுவரை இரண்டு மாநாடு நடத்தி முடித்துள்ளார். இப்போதே நரியின் சாயம் வெளுத்து போச்சு டும் டும்.. ராஜா வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும் என்பதை போல் அனைத்து தரப்பு விமர்சனங்களையும் தாங்கி சென்றுள்ளார். அவர் இன்னும் 2,3 மாநாடு நடத்தினாலே காலி பெருங்காய டப்பாவாகி விடுவார்.
முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்ததன் மூலம், அவருடைய உயரம் அவ்வளவுதான் என்பது தெரியவந்துவிட்டது. இன்றைக்கு கூட முதலமைச்சரின் புகழ் கொடி இமயமலையின் உச்சியில் பறந்து கொண்டிருக்கிறது. திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே வழிகாட்டுதலாக இருக்கின்றது.
சிறு பிள்ளை தனமான இந்த பேச்சுகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை நோக்கி நாங்கள் சென்றுக்கொண்டிருக்கிறோம். இப்படி சிறுபிள்ளைதனமாக பேசுபவர்களை களத்தில் சந்திப்போம். 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். தேர்தல் வெற்றியை முதலமைச்சர் கரங்களில் ஒப்படைப்போம் என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ