)
Tamil Nadu News Latest Updates: புதுக்கோட்டையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வினோஜ் பி செல்வம் இன்று (ஏப். 20) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
TN News Latest Updates: மகத்தான வெற்றி உறுதி
அப்போது பேசிய அவர்,"கூட்டணி என்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதற்காக இயற்கையாக அமைந்த கூட்டணியே, அதிமுக - பாஜக இடையேயான கூட்டணியாகும். வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. ஏழு கோடி தமிழர்களின் நன்மைக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இது இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை சந்திக்கும்.
TN News Latest Updates: வன்மத்தோடு பேசி வருகிறார்கள்
அதிமுக ஐந்து முறை ஆட்சியில் இருந்த கட்சி. அதே போல் பாஜக 3 முறையாக மத்தியில் ஆளுகின்ற ஒரு மாபெரும் கட்சி. இந்த இரண்டு கட்சிகளையும் கூட்டணி அமைத்திருப்பது திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு புரளிகளை கிளப்பி விட்டு இந்தக் கூட்டணி உடைய வேண்டும் என்று கோயில் கோயிலாக சென்று திமுகவினர் அங்கப் பிரதட்சணம் செய்து வருகிறார்கள்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற செட்டியார் சமுதாய மாநில ஆயத்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்று, மாநில வளர்ச்சியில் சமுதாயத்தின் பங்கு குறித்தும், தேசியவாத சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு தேச கட்டுமானத்திற்கு பெரும் பங்காற்றி வருவது குறித்தும் என்னுடைய ஆழமான கருத்துக்களை… pic.twitter.com/T7pgd0demO
— Vinoj P Selvam (@VinojBJP) April 20, 2025
தேர்தல் வருவதற்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள், கூட்டணியை உடைத்து வெளியேறும் என்று பார்க்கத்தான் போகிறோம். திமுகவினர் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் 'படுக்க வெச்சா, நிக்க வச்சா' என வாய் தவறி பேசவில்லை. வன்மத்தோடு தான் பேசி வருகிறார்கள்.
TN News Latest Updates: செந்தில்பாலாஜி ரெக்கார்ட் படைப்பார்
அவர்கள் திராவிட தீவிரவாதியாக உள்ளனர். பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும், அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும். இதற்காக அவரது தொகுதியான திருக்கோவிலூரில் பாஜக மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
திமுகவின் கடைசி பத்தாண்டு கால ஆட்சி எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிவிட்டு செல்லட்டும். அதன் பிறகு திஹார் சிறையா, புழலா சிறையா என்று நீதிமன்றங்கள் முடிவு செய்யும். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி 450 நாட்கள் சிறையில் இருந்தார். டாஸ்மாக் ஊழலில் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. மீண்டும் அவர் ரெக்கார்டை அவரே பிரேக் செய்யும் வகையில் அதிக நாட்கள் சிறையில் இருப்பார்" என்று பேட்டியளித்தார்.
TN News Latest Updates: திண்டுக்கல்லில் நயினார் நாகேந்திரன்...
முன்னதாக திண்டுக்கல்லில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "இரட்டை இலை - தாமரை உறுதியான, இறுதியான கூட்டணி. யார் யாருக்கு எவ்வளவு பங்கெடுப்பது என்பது எனக்கும் தேவையில்லை. நமக்கும் தேவையில்லை. இது குறித்து இணையதளத்தில் பகிர்வதால் இந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது.
ஆட்சியில் இருந்து திமுகவை அப்புறப்படுத்த வேண்டியது நமது வேலை, அதுதான் முக்கியம். தமிழக முதலமைச்சர் எந்த ஷா வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என கூறியுள்ளார். ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும், அது அவருடைய பொறுப்பு" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ