அண்ணாமலைக்கு அமைச்சர்கள் பிடிஆர், செந்தில் பாலாஜி கொடுத்த பதிலடி..!

Annamalai : மும்மொழிக் கொள்கை தொடர்பாக அண்ணாமலை எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் செந்தில் பாலாஜி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 13, 2025, 10:39 AM IST
  • மும்மொழிக் கொள்கை காரசார விவாதம்
  • தமிழ்நாட்டுக்கு மும்மொழி தேவையில்லை
  • அண்ணாமலைக்கு பிடிஆர் செந்தில் பாலாஜி பதிலடி
அண்ணாமலைக்கு அமைச்சர்கள் பிடிஆர், செந்தில் பாலாஜி கொடுத்த பதிலடி..! title=

Ministers PTR and Senthil Balaji Respond to Annamalai ; மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகபடுத்தி அதனை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு அந்த புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் மும்மொழிக் கொள்கையை மட்டும் ஏற்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழ்நாட்டுக்கு மும்மொழிக் கொள்கை தேவை என்றும், திமுக அமைச்சர்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மட்டும் மும்மொழி படித்தால் போதுமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், அமைச்சர் பிடிஆர் மகன்கள் எங்கு படிக்கிறார்கள்? என்றும் வினவினார்.

அவருக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மூன்றாவது மொழி என்பதே இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் முயற்சி தான் என விமர்சித்துள்ள அவர், வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் எத்தனை மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்தோடு காட்ட முடியுமா?, எங்காவது மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்களா? ஒரே ஒரு எடுத்துக்க்காட்டு காட்ட முடியுமா? என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழியும், ஏனையவர்களோடு உரையாட ஆங்கிலமும் பொதுமொழியாக போதும் என கூறியிருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வட மாநிலங்களில் இன்றுவரை இருமொழிக் கொள்கை கூட சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி இந்தி மட்டுமே, ஆனால் அவர்கள் மும்மொழி படிக்கமாட்டார்கள், தமிழ்நாட்டவர்கள் மட்டும் மும்மொழி படிக்க வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்னுடைய மகன்கள் இரு மொழிக் கொள்கையில் மட்டுமே படித்திருக்கிறார்கள் என விளக்கம் அளித்திருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்கள் உள்ளிட்ட தனிநபர் சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் எல்லாம் பொதுப் பிரச்சனையை திசை திருப்ப பாஜக கடைபிடிக்கும் யுக்தி, இந்த விஷம பிரச்சாரத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசுக்கு கல்விக் கொள்கை எல்லாம் இல்லை, அவர்களின் காவிக் கொள்கையை திணிக்கவே தமிழ்நாட்டை மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள் என பேசியிருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி தரத்தை மேம்படுத்துவதை விடுத்து, சிறப்பாக இருக்கும் தமிழ்நாட்டை கல்வியில் பின்னுக்கு இழுக்க செய்யப்படும் மோசமான முயற்சி என்றும் விமர்சித்துள்ளார்.

இதேபோல் கரூரில் திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கோமாளி என விமர்சித்தார். காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு என மாறிமாறி பேசக்கூடியவர் அவர், லண்டன் சென்றபோது எந்த மொழியில் பேசினார் என செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். மும்மொழிக் கொள்கை பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இருமொழிக் கொள்கையில் சிறப்பாகவே தமிழ்நாடு இருக்கிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

மேலும் படிக்க | ’தர்மேந்திர பிரதான் பொய் சொல்லாதீங்க’ கனிமொழி, பிடிஆர் காட்டமான பதிலடி

மேலும் படிக்க - குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: ஹோலிக்கு முன் 3 குட் நியூஸ் காத்திருக்கு.. வரும் வாரம் அட்டகாசம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News