MK Stalin: சாதி ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச்சட்டம் உருவாக்குவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், சாதி ஆணவப்படுகொலை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயறப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
MK Stalin: முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது, "உலகம் அறிவு மயம் ஆகிறது. ஆனால், அன்பு மயம் ஆவதை தடுக்கிறது; சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது. ஆணவப் படுகொலைக்கு சாதி மட்டும் காரணம் இல்லை; எதற்காக நடந்தாலும் கொலை, கொலைதான். அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்; ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனை கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. சீர்திருத்தப் பரப்புரையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
MK Stalin: சாதி பெயரே இருக்கக் கூடாது
சீர்திருத்தச் சிந்தனை தமிழ் மண்ணில் அதிகம் விதைக்கப்பட்டது. இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது; சாதி வேற்றுமையானது. வேற்றுமை விதைக்கப்பட்டதும், ஒற்றுமைக்கான குரல்கள் தமிழ் மண்ணில் உரக்க எழுந்ததை காண்கிறோம். அனைத்து சாதியினரை அர்ச்சகராக்கி இருக்கிறோம்; சமநீதி, சமூக நீதி உறுதிமொழி எடுக்கிறோம். பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம்" என்றார்.
(2/2) pic.twitter.com/2DROPpqgjZ
— TN DIPR (@TNDIPRNEWS) October 17, 2025
MK Stalin: ஆணையத்தில் யார் யார் இடம்பிடிப்பார்கள்?
மேலும், இது குறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திரு. கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.
இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளித்து அமைகிறேன்" என்றார்.
மேலும் படிக்க | ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு... உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
மேலும் படிக்க | தீபாவளி போனஸ்! டாஸ்மாக், கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கு எல்லாம் கிடைக்காது - விதிமுறை சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









