Six Important Schemes For Madurai, MK Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை நகரத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு'TN Rising' எனும் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் "மதுரை மாஸ்டர் பிளான் - 2044" அறிககையை வெளியிட்டார்.
MK Stalin: நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் 3,065.49 கோடி ரூபாய் செலவிலான 63 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 1 லட்சத்து 77 ஆயிரத்து 562 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்' என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அதை நேரில் சென்று பார்வையிட்டார்.
Tamil Nadu Government: 6 முக்கிய அறிவிப்புகள்
பந்தல்குடி வாய்க்காலில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்திற்கு ஆறு புதிய வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆறு வளர்ச்சித் திட்டங்களையும் இங்கு ஒவ்வொன்றாக காணலாம்.
1. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய சாலை
மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வைகை ஆற்றின் வடகரையில் - விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.130 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. பழைய பாதாள குழாய் திட்டம் மாற்றம்
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகள், மீனாட்சியம்மன் கோயில் சுற்றிய நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா ஆகிய பகுதிகளில் பழைய பாதாள சாக்கடை குழாய்கள் அகற்றப்பட்டு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
3. வெள்ளத் தடுப்புச் சுவர்
மதுரை கிழக்கு மாவட்டத்தில் இருக்கும் உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் ரூ.7 கோடியில், தடுப்புச் சுவர் கட்டுப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. கண்மாய் புனரமைப்பு, தடுப்பணை கட்டுமானம்
மதுரையின் மேலூர் வட்டத்தில் இருக்கும், கேசம்பட்டி கிராமம், பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலூர் வட்டம், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
5. ஏரிகள் & கால்வாய்கள் மேம்பாடு
மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கும் கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கும் பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
6. முக்கிய சாலைகள் மேம்பாடு
வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தின் சாத்தையார் அணை முதல் வைகாசிப்பட்டி வரை உள்ள சாலை, முடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை உள்ள சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை உள்ள சாலை ஆகியவை ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்.
மேலும் படிக்க | தமிழகத்தில் 13ஆம் தேதி வரை மழை இருக்கும்.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
மேலும் படிக்க | தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க காரணம் முதல்வர் - திருச்சி சிவா!
மேலும் படிக்க | ஈரோட்டில் விஜய் பொதுக்கூட்டம்! செங்கோட்டையன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









