MK Stalin News: ரமலான் பண்டிகையை முன்னிட்டு திமுக சிறுபான்மை நல உரிமைப் அணியின் சார்பில் இன்று சென்னை திருவான்மியூரில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
MK Stalin News: காயிதே மில்லத் - கருணாநிதி புகைப்படம்
அந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,"இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மற்றும் கலைஞர் கருணாநிதி சேர்ந்து இருக்க கூடிய புகைப்படத்தை வைத்து இந்த விழா வடிவமைக்கப்பட்டுள்ளது, இதைவிட சிறப்பாக இந்தவிழாவை வடிவமைக்க முடியாது. நட்பின் அடையாளமாகவே இந்த புகைப்படம் உள்ளது. காலம் காலமாக இன்ப துன்பங்களின் நட்பாக, உரிமைகளுக்கான குரலாக திமுகதான் உள்ளது என்பதன் அடையாளம் இந்த புகைப்படம்.
MK Stalin News: மிலாடி நபிக்கு அரசு விடுமுறை....
திமுக முதல்முறையாக ஆட்சிக்கு பொறுப்பேற்று, மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை அதிமுக ஆட்சியமைந்த உடனே ரத்து செய்யப்பட்டது. கலைஞர் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்து அந்த உத்தரவை ரத்து செய்து, மிலாடி நபிக்கு மீண்டும் அரசு விடுமுறை அளித்தார்.
MK Stalin News: ரமலான் நல்வாழ்த்துகள் தெரிவித்த ஸ்டாலின்
தனக்கு நன்றி கூறி இஸ்லாமியர்களை தன்னிடம் இருந்து பிரித்து பார்க்க வேண்டாம் என கலைஞர் கூறுவார். சிறுபான்மையினர் சமூக பொருளாதார கல்வி நிலையங்கள் பயன்படுத்த பல்வேறு திட்டங்களை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.
குடியுரிமை திருத்தச்சட்டம் மூலம் ஒரு இஸ்லாமியர் கூட பாதிக்க மாட்டார்கள் என கூறியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுகவினர் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்தோம். இஸ்லாமிய சகோதரர்களுக்கு புனித ரமலான் வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
MK Stalin News: கல்வி உதவித் தொகையை நிறுத்திய மத்திய அரசு
தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,"சிறுபான்மையினர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திய நிலையில் 1- 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகளுக்கு மாநில அரசு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கி வருகிறது
MK Stalin News: பாதுகாப்பு அரணாக இருக்கும் திமுக
அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது. மற்ற மாநிலங்களில் வருந்தக்க சூழல் இருந்தாலும் தமிழ்நாட்டில் மதரீதியான வன்முறை ஏற்படாமல் காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்ட போது மக்கள் இயக்கமாக ஒரு கோடி கையெழுத்து திமுகவால் பெறப்பட்டது.
MK Stalin News: சிறுபான்மையினர் மன்னிக்க மாட்டார்கள்
குடியுரிமை திருத்த சட்டத்து ஆதரவாக அதிமுக வாக்களித்தது. அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. அதற்கு திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து வாக்களித்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் எனக் கூறினார். இதனை எந்த சிறுபான்மையினரும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டீர்கள்.
MK Stalin News: பாஜகவின் சதி நிறைவேறாது!
ஆனால் தற்போது எந்த கூச்சமும் இல்லாமல் இஸ்லாமியர்களின் விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். ஆபத்து காலத்தில் இஸ்லாமியர்கள் எதிராக செயல்பட்டுவிட்டு குற்றவுணர்ச்சி இல்லாமல் இஃப்தார் விழாவில் சிலர் பங்கேற்கின்றனர். வஃக்பு வாரிய சட்டத்திற்கு எதிராகவும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் போராடுகிறோம்.
பாஜகவின் சதித்திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது. உறுதியாக போராடுவோம். இஸ்லாமியர்களுக்கு துணையாக திமுக என்றும் செயல்படும். இஸ்லாமியர்களின் உரிமைகளில் போராடுபவதால் இத்தகைய விழாக்களில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளோம்" என்றார்.
மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம்... திமுக அரசு புறமுதுகு காட்டுவது ஏன்? - விஜய் கேள்வி
மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் விவகாரம்: சென்னை வேல் பேரணி வழக்கு - உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன?
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மட்டுமே பிரச்சனை! திமுக அரசை கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









