Annamalai News: பிரதமர் மோடி (PM Narendra Modi) இன்று ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட செங்குத்து ரயில் பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தார்.
Annamalai News: 11 ஆண்டுகளில் 4 முறை ராமேஸ்வரம் பயணம்
மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை (TN BJP President Annamalai) செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது,"11 ஆண்டுகளில் நமது பிரதமர் நான்கு முறை ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். 8300 கோடி ரூபாய் திட்டப்பணிகளை இன்று பிரதமர் அறிவித்துள்ளார். ராமநவமி நாட்களில் விரதத்தில் இருந்து வருகிறார் பிரதமர். ராமநவமி நாளான இன்று 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை இன்று பிரதமர் திறந்து வைத்துள்ளார்.
Annamalai News: 'ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்'
நான்கு ஆண்டுகளு பிறகு தமிழகத்தில் நடைபெறக்கூடிய இந்த நிகழ்வில் முதல்வர் கலந்து கொள்ளவில்லை. அதற்காக முதல்வர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரை வரவேற்க வேண்டியது நம்முடைய பிரதிநிதியாக உள்ள முதல்வரின் தலையாய கடமை ஆகும். ஆனால் முதல்வர் வெயில் கொடுமையால் ஊட்டிக்கு சென்று விட்டார். முதல்வர் ஸ்டாலினின் (TN CM MK Stalin) இந்த செயலை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக மக்களுக்காக பணி செய்ய வந்த பிரதமரை முதல்வர் அவமதிக்கும்படி நடந்து கொண்டுள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஊட்டியில் அமர்ந்து கொண்டு ராமேஸ்வரம் வரும் பிரதமரை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச வேண்டும் என கூறி வருகிறார்.
தொகுதி மறு சீரமைப்பு (Delimitation) குறித்து தமிழக முதல்வர் தவறாக பேசி வருகிறார். இதை ஒரு காரணமாக வைத்து ஊட்டியில் ஒளிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் தான் கையெழுத்திடுகிறார்கள்; மருத்துவ படிப்பு ஏன் தமிழில் கொடுக்கவில்லை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பிரதமர் பேசியுள்ளார்" என்றார்.
Annamalai News: பிரதமர் மேடையில் இல்லாதது ஏன்?
தொடர்ந்து பழக்கமாக பிரதமர் நிகழ்வுகளில் மேடையில் அமரும் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மேடையில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு,"இன்று நடந்தது அரசு நிகழ்வு என்பதால் மேடைக்கு பின்புறம் இருந்தேன். ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். அரசு நிகழ்வுகளில் நான் மேடை ஏற முடியாது, அதனால்தான் மக்கள் பிரதிநிதியாக எல்.முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்" என்றார்.
Annamalai News: புதிய பாலத்தில் கோளாறு?
பிரதமர் திறந்து வைத்த பாலத்தில் கோளாறு ஏற்பட்டதாக இன்றைய செய்தி வந்தது குறித்த கேள்விக்கு,"பிரதமர் திறந்து வைத்த பாலத்தில் ரயில் சென்றது ஆனால் பாலம் பழுது ஏற்பட்டதாக செய்தி வருகிறது அது உண்மையாகவே நடந்ததா ? இல்லை செய்தி தவறாக வந்துள்ளதா? என தெரியவில்லை" என்றார்.
Annamalai News: 'வேலையில்லாமல் இருக்கும் முதல்வர்'
எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறார், நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என இபிஎஸ் தைரியமாக கூறுவாரா என முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு,"காங்கிரஸ் கட்சி இவர்களை காலடியில் அழுத்திதான் சீட்டு கொடுத்தது. இந்திரா காந்தியை திட்டியவர் கருணாநிதி. நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா என்று கூறியவர்கள் இவர்கள்தான். நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் உள்ளதாக ஆட்சிக்கு வந்தீர்களே, நான்காண்டுகளாக அந்த ரகசியம் எங்கே உள்ளது? என்ன ரகசியம்? என மக்களுக்கு தெரிவிக்கவில்லை.
நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி இடம் அனுப்பிய போது அது திருப்பி அனுப்பப்பட்டது. முடியாத காரணத்தினால் உப்புச்சப்பு இல்லாத காரணத்தை முன்வைத்து அடுத்தவர்கள் கூட்டணி குறித்து பேசுவது முதல்வர் வேலையில்லாமல் உள்ளார் என்பதை காட்டுகிறது" என்றார்.
Annamalai News: அடுத்த மாநில தலைவர் ரேஸ்...
வி பி துரைசாமி அடுத்த மாநில தலைவரும் அண்ணாமலைதான் என கூறி வருவதாக செய்தியாளர்கள் கேள்விக்கு,"நான் ஏற்கனவே பலமுறை கூறி விட்டேன். தலைவர் போட்டியில் நான் இல்லை. தலைவராக இருந்தபோது என்ன பணி செய்தேனோ அதே பணியை தொண்டனாக இருக்கும்போதும் தொடர்வேன்" என தெரிவித்தார். அமித்ஷா வருகிற 10ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக தகவல் வெளிவந்தது குறித்த கேள்விக்கு," இதுவரை அமித்ஷாவின் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை" என்றார்.
மேலும் படிக்க | 'ராம நவமியில் ராமர் பாலத்தை தரிசித்தேன்...' பிரமதர் மோடியின் தெய்வீக பதிவு...!
மேலும் படிக்க | 'கையெழுத்தை தமிழில் போடுங்கள்...' தமிழக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









