பருவமழை இந்த மாதம் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான செயல்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக வடசென்னை மண்டலம் ஒன்றுக்கு உட்பட்ட 14 வார்டுகளிலும், மழைகாலத்தில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் இந்த மண்டலத்தில் பணிபுரியும் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்
இந்த கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர், ‘திருவொற்றியூர் மண்டலத்தில் மக்களுக்கு சேவை செய்யாத அதிகாரிகள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைக்கின்றனர், அந்த கோரிக்கையை நாங்கள் அதிகாரிகளிடம் கூறுகிறோம். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் கூறினால் கூட அந்த பணியை செய்யக்கூடிய மனநிலையில் அதிகாரிகள் இருப்பதில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தின் மீது திருவெற்றியூர் மக்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை சரி செய்திருந்தால் பயிற்சி வகுப்பு முடித்து வந்த மாணவன் உயிரிழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது
மின்வாரியம் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் இணையதளத்தில் கோரிக்கைகளை பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அரசுக்கு தான் அவப்பெயர்.’ என்றார். மக்களுக்கான பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகளை கண்டித்து கடிந்து கொண்டார் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.
மேலும் படிக்க | இந்த மாவட்டங்களில் கனமழை பொழியும்.. வானிலை நிலவரம் என்ன?
மேலும் படிக்க | நாளை சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









