Tamil Nadu government : தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துகாக கலைஞர் உரிமைத் தொகை, புதுமைத் பெண் திட்டம், மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதைப் போலவே படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆக விரும்பினால் அதற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டல், கடனுதவிகளை வழங்கும் தமிழ்நாடு அரசு, இந்த வாய்ப்பும் கிடைக்கப்பெறாதவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்த உதவித் தொகையை கொடுக்கிறது. அந்தவகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.03.2025 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு (+2), பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதி உடையவர் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு (+2) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31.03.2025 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களாயின், அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுப்பிரிவினர்;
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை (SSLC-Failed) -ரூ.200/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (SSL.C-Passed) - 300/-
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (HSC-Passed) - 400/-
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (DEGREE-Passed) - 600/-
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்
எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வருப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு - 600/-
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (HSC-Passed) - 750/-
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு (DEGREE-Passed) - ரூ.1000/-
(சிறப்பு நேர்வாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு மாதாந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது)
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அரல் பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து, விண்ணப்பப்படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் இலவசமாக பெற்று பயன்பெறலாம். விண்ணப்பதாரர் அரகதுறை/தனியார் துறையிலும் எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயதொழில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர் மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழிற் கல்வி, பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஓய்வு காலத்தில் கைநிறைய பணம் வேண்டுமா... இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









