தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் படிப்பிற்காகவும், திருமண செலவிற்காகவும் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் படிப்பும், திருமணமும் அவர்களது வாழ்க்கையில் மாற்றுகிறது. ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இது இரண்டுமே பெரும் சுமையாக இருந்து வருகிறது. இன்றைய சூழலில் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்தாலே லட்ச கணக்கில் செலவாகும் சூழ்நிலை தான் இறுதி வருகிறது. இதனை ஏழை குடும்பங்கள் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு திருமண உதவித் திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் உயர் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.
1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக ரூபாய் 25,000 மற்றும் ரூபாய் 50,000 உதவித்தொகை பெற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் தாலிக்கு எட்டு கிராம் எடையுள்ள தங்க நாணயமும் வழங்கப்படும். முன்பு இந்த திட்டத்தில் திருமணத்தின் போது ரூபாய் 10,000 நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில், 2009 ஆம் ஆண்டு ரூபாய் 25000 ஆகவும், 2011 ஆம் ஆண்டு 50,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலும் தாலிக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட நிலையில், 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அது எட்டு கிராம் ஆக உயர்த்தப்பட்டது.
ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்தவராக இருந்தால் திருமணத்தின் போது ரூபாய் 25,000 ரொக்கமும் எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். அதே போல பட்டப்படிப்பு படித்தவராக இருந்தால் திருமணத்திற்கு ரூபாய் 50,000 உதவித்தொகையும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். மூலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற உங்களிடம் வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, திருமண அழைப்பிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிரம்பி இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால் அதில் ஒருவருக்கு மட்டுமே இந்த திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதே போல கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு செய்த மாற்றங்கள்
கடந்த 2022 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டத்தை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று தமிழக அரசு மாற்றியது. இதன் மூலம் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata