2026ல் திமுக vs தவெக தான் போட்டியா? தமிழச்சி தங்கபாண்டியன் சொன்ன பதில்!

திமுக என்பது வளர்ந்த ஆலமரம், எது குறித்தும் யாருடைய சாவல்களுக்கும் அது அஞ்சாது என தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி.

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2025, 01:54 PM IST
  • திமுக என்பது வளர்ந்த ஆலமரம்.
  • யாருடைய சவல்களுக்கும் அஞ்சாது.
  • தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி.
2026ல் திமுக vs தவெக தான் போட்டியா? தமிழச்சி தங்கபாண்டியன் சொன்ன பதில்!

திமுக என்பது வளர்ந்த ஆலமரம், எது குறித்தும் யாருடைய சாவல்களுக்கும் அது அஞ்சாது என தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி அளித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு தர வேண்டிய 4034 கோடி நிலுவை தொகையை வழங்க கோரி மத்திய அரசை கண்டித்து சென்னை மேடவாக்கத்தில் திமுக ஒன்றிய கழக செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி கோஷங்களை எழுப்பினர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | தவெக OUT - பாஜக IN.. மாஸ்டர் பிளான் போட்ட இபிஎஸ்... முழுப் பின்னணி

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம், நண்மங்கலம், பெரும்பாக்கம், வேங்கைவாசல் ஆகிய 7 ஊராட்சியில் 2882 பேர் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த ஐந்து மாதங்களாக அனைவருக்கும் ஊதியம் வழங்கவில்லை என்றும் இதனால ஏழை எளிய மக்கள் கடுமையாக பதிக்கபடுகிறார்கள் என்றும் திமுக சார்பில் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர்ராஜா மற்றும் மாற்றுத் திறனாளிகள் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அரசுக்கு பெருமளவில் வரி பங்களிப்பு,நிதி பங்களிப்பு,அனைத்து உழைப்பு பங்களிப்பு செய்து வருகின்ற தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற வகையில் 5 மாதங்களாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாயுப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய சம்பள தொகை 4034 கோடி ரூபாயை வழங்காமல் இருக்கின்ற மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் 1000 ரூபாயை கொடுக்கிறார்,பிரதமர் சம்பளத்தை கொடுக்காமல் இருக்கிறார் என்று 100 நாள் வேலை செய்யும் பெண்கள் தெரிவித்தனர்.

100 நாட்கள் வேலை செய்யும் பெண்களுக்கு தர வேண்டிய சம்பள நிதியை தர வேண்டும் என்று  ஜனவரி 16 ம் தேதி தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரடியாக மத்திய நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பாராளுமன்றத்தில் உள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து தினந்தோறும் பேசி வருகிறோம். ஆனால் செவுடன் காதில் ஊதியது சங்கு என்ற பழமொழியை இப்போது சொல்வது வழக்கம் அல்ல, ஆனால் இந்த மத்திய அரசு எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் எப்பொழுதும் நம்மை வன்ஜிக்கின்ற செயலில் தொடர்ந்து செய்து வருகின்றனர். 2026 ல் திமுக vs தவெக தான் போட்டி என்ற கேள்விக்கு, திமுக என்பது வளர்ந்த ஆலமரம், எது குறித்தும் யாருடைய சவல்களுக்கும் அது அஞ்சாது என பேட்டியளித்தார்.

மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி...! எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரலாம்... என்ன காரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News