)
திமுக 2026 தேர்தலில் மீண்டும் முதல்வர் அரியணையில் அமரப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் புதிதாக தமிழக வெற்றி கழகம் புதிதாக கட்சியில் இணைத்துள்ள செங்கோட்டைய பற்றி கேட்டபோது அடுத்த முதல்வர் விஜய் தான் என்று கூறினார். அதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் என்று கூறினார். எங்கள் பணியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். கரூர் வெண்ணமலை முருகன் கோயில் சம்மந்தமான பிரச்சனைகள் கடந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தவறான தகவல்களால்தான் தற்பொழுது நடைபெற்று வருகிறது. கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.

கரூர் மாவட்டம் தனியார் மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி பிரேம் மஹாலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, 2026 தேர்தலில் மீண்டும் முதல்வர் அதிகாரையில் அரியணையில் அமரப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் வெண்ணைமலை கோயில் சம்பந்தமான தவறான தகவல்களை நீதி மன்றத்தில் அதிமுகவினர் கொடுத்ததால் தான் தற்பொழுது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கட்சிகள் மற்றும் சில இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மக்களை குழப்பும் அளவிற்கு கருத்துக்களை சொல்லி வருவது ஒரு தவறான முன்னுதாரணம்.
2018ல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 2019ல் தீர்ப்பு வந்தபோது, அப்பொழுது அதிமுக ஆட்சியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவர்களை வழிநடத்துபவர்கள் ஒரு சில தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு காரணம் அந்த அதிகாரிகள் கொடுத்த தவறான தகவல்கள் தான். அதனை களைவதற்கான பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே அங்கு அரசு மற்றும் காவல் துறையும் அங்கு நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியது. ஆனால் அரசை பொருத்தவரை அப்பகுதி மக்களுக்கு முழு அரணாக பாதுகாப்பால் அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது.
அப்பகுதி மக்களுக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மக்களின் உணர்வை உணர்ந்து அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் அரசுத் துறை அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் அரசு வழக்கறிஞர்கள் சந்தித்து பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கத்தின் சார்பில் பட்டா வழங்கப்பட்ட 363 ஏக்கர் உள்ளது. கோயில் பெயரில் உள்ள இடங்களும் உள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் அவர்கள் 5 பிரிவாக பிரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் தற்பொழுது நீதிமன்றத்தில் தீர்வு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே மக்களிடையே எந்தவித சந்தேகமும் தேவையில்லை குழப்பமும் அடைய வேண்டாம். அப்பகுதி மக்களிடம் செல்லக்கூடியவர்களும் அவர்களுக்கு ஒரு தகவலான தகவல்களையும் வழிகாட்டுதலையும் வழங்கவும் வேண்டாம் பரப்ப வேண்டாம். இவ்வளவு நாள் சென்று அப்பகுதி மக்களை சென்று பார்க்காதவர்கள் தற்பொழுது சென்று பார்க்கிறார்கள், யாரு முடிச்சு போட்டார்களோ அவர்களே அவுக்குறோம் என்று சொல்வது நியாயமில்லாத செயல். எந்த ஆட்சி காலத்தில் தவறு நடந்தது? யார் தவறு செய்தார்? யார் தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்? இப்பொழுது மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்து தருகிறோம் என்பது நகைச்சுவையா இருக்கு. கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த தவறை இன்று நாங்கள் சரி செய்து கண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ