வன்முறைப் பேச்சு: நாம் தமிழர் ஆதரவாளர் துரைமுருகன் கைது
தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் நேற்று அனுமதியின்றி நடத்தப்பட்டது. அப்போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அக்கட்சியின் ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் (Naam Tamilar katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ALSO READ | அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு ஒதுக்கீடு தேவை: சீமான் வலியுறுத்தல்
அப்போது கூட்டத்தில் பேசிய யூ டியூபர் சாட்டை துரைமுருகன், ”தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார்”. மேலும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் வன்முறை கருத்துகளையும் பேசியுள்ளார். இது தொடர்பான புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் காலை கைது செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள்தான் என்று தொடர்ந்து பேசிவரும் நாம் தமிழர் கட்சியினர் அதே போக்கை நேற்றும் கையில் எடுத்தனர். அப்போது சீமான் முன்னிலையில் பேசிய துரைமுருகன், ”பிரபாகரன் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்று ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் தெரியும். ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்கிறதா?” என்று பேசினார். இக்கருத்துகள் சமூக அமைதியை கெடுக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்.பி. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் புகார் அளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
காலையில் சாட்டை துரைமுருகன் பத்மநாபபுரம் மாஜிஸ்திரேட் தீனதயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாக பேசிய நபரை தாக்கிய சம்பவத்தில் கைது ஆகியிருந்தார் துரைமுருகன்.
ALSO READ | DMK chief MK Stalin: வெற்றி நமதே! கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்போம்…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G