)
La Ganesan Passed Away: நாகாலந்து மாநில ஆளுநர் இல. கணேசன் (80) உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
கடந்த 8 நாள்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) இருந்து வந்த நிலையில், இன்று மாலை 6.23 மணிக்கு இல. கணேசன் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
#BreakingNews | நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்#LaGanesan #RIPLaGanesan #bjp #Nagaland #RIP #News #zeetamilnews pic.twitter.com/jHNser0WTn
— Zee Tamil News (@ZeeTamilNews) August 15, 2025
1945ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த இல. கணேசன் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் அவரது சகோதரரால் வளர்க்கப்பட்டார். அவர் எஸ்எஸ்எல்சி வரை படித்ததாக கூறப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து தனது அரசு வேலையையும் சமூகப் பணிக்காக துறந்தார். தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர செயற்பாட்டாளராக இருந்தார். இதனால் அவர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை.
இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலகட்டத்தில் இவர் சுமார் ஒரு வருட காலத்திற்கு தலைமறைவாக இருந்தார். அதன்பின் பாஜகவின் தேசிய செயலாளராகவும், துணை தலைவராக இருந்தார். 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை தமிழக பாஜக மாநில தலைவராக தேர்வானார். 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டார்.
2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை மணிப்பூரின் 17வது கவர்னராக செயல்பட்டு வந்தார். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நவம்பர் வரை மேற்கு வங்கத்தின் கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். மணிப்பூரில் இருந்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாகாலாந்து மாநிலத்தின் 19வது கவர்னராக நியமிக்கப்பட்டார். தற்போது கவர்னராக இருந்து வரும் சூழலில் இன்று உயிரிழந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் தீவிரமாக போராடி வந்த காலகட்டத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, "நாடு நலம் பெற வேண்டும் எனில் ஒரு மாநிலத்தை (தமிழ்நாட்டை) தியாகம் செய்யலாம்" என இல. கணேசன் பேசியிருந்தது அப்போது பெரும் சர்ச்சையை கிளிப்பியிருந்தது.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவரது X பக்கத்தில், "நாகலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான இல. கணேசன் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும் கனிவான குணமும் கொண்டவர், தனது வாழ்நாளை தேசத்திற்காகவும் சமூக நலனிற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார்.
மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநரும், நமது பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அய்யா இல. கணேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
— Dr.L.Murugan (@DrLMurugan) August 15, 2025
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை சாமானிய மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர், கண்ணியமான பேச்சும்… pic.twitter.com/tMjNmJDqZy
நாகலாந்து மாநில ஆளுநராக தனது சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்த இல. கணேசன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவரது X பக்கத்தில், "நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான இல. கணேசன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, ஐயா திரு. இல. கணேசன் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
— K.Annamalai (@annamalai_k) August 15, 2025
தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும்… pic.twitter.com/vXNanLofp2
தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர். இல. கணேசனின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ