தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 15000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 14000 இளைஞர்களுக்கு வேலை உருவாக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஃபாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி மற்றும் மூத்த உலகளாவிய நிர்வாகி ராபர்ட் வூ ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.
ஆனால், தமிழ்நாட்டில் எந்த முதலீடும் செய்வதாக கூறவில்லை என ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ. 15,000 கோடி வருகிறதா, இல்லையா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்ததாகத் திமுக அரசு அறிவித்த வேளையில், "அது புதிய முதலீடல்ல" என்று நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளித்தது பத்திரிகைச் செய்திகளில் வந்தது.
இதனைத் தொடர்ந்து, அவசரகதியில் தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்கள் "அது உண்மையான முதலீடு" என்று விளக்கமளித்தார். ஆனால், அதற்கு எந்த ஆதாரத்தையும் பொது வெளியில் தரவில்லை. முதலீடு எதுவுமில்லை என்று மறுப்பு தெரிவித்த நிறுவனமும், மாற்று அறிவிக்கை ஏதும் வெளியிடவில்லை!
எதற்கு இந்தக் குழப்பம்? ஒருவேளை NDA ஆளும் ஆந்திரா மாநிலத்தில் கூகுள் நிறுவனம் ரூ.1.3 லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதை அறிந்ததும், திமுக அரசின் குறைபாடுகளை மூடி மறைத்து திசைதிருப்ப முழுமையடையாத அல்லது போலியான அறிவிப்பு வெளியிடப்பட்டதா? இல்லை, பழைய முதலீடு தூசித்தட்டப்பட்டு புதியது போல பாவனை செய்யப்பட்டதா? எது உண்மை?
முதன்முதலில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் என்னும் அடிப்படையில் கேட்கிறேன். தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அல்லது, புதிய முதலீடு எனத் திமுக கூறி வருவதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை அறிவிக்கை ஒன்றினை வெளியிடச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சிபிஐ அதிகாரி எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி.. கோவையில் சுற்றிவளைப்பு!
மேலும் படிக்க: கரூர் விவகாரம்: விஜய் செய்யும் தப்பு இதுதான்..நெப்போலியன் அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









