)
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடிகர் விஜய் கடந்த ஆண்டு முதல் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் கட்சியின் கொடி மற்றும் கொள்கைகள் குறித்து விவரித்திருந்தார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாராக இருந்து வரும் இவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல் வாதியாக செயல்பட இருக்கிறார்.
தற்போது நடத்து வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என கூறி இருந்தார். இப்படம் முடிந்ததும் முழு நேரமாக அரசியல் களத்தில் இறங்க இருக்கிறார் விஜய். 2026ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து அவ்வபோது கட்சி நிர்வாகிகளை சந்தித்து அறிவுரை வழங்கி வருகிறார். ஜனநாயகன் படம் நிறைவடைந்ததும் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
2026ல் அவர் யாருடன் கூட்டணி வைக்கிறார் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. தமிழகத்தை ஆண்டு வரும் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் அதே வேளையில் அவ்வப்போது பாஜகவையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விஜய்க்கு ஏற்கனவே அழைப்பு விடுத்ததாக ஈரோட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கூறி உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு விஜய்க்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பதில் இனிமேல்தான் வரும் என்று நினைக்கிறேன் என கூறினார்.
பாஜகவை கொள்கை எதிரியாக கூறிய விஜய், அந்த கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு பாஜக அழைப்பு விடுத்து வருவது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ