'பாஜக ஆட்சி அமைக்க இது சரியான நேரமில்லை...' நயினார் நாகேந்திரன் மதுரையில் பேச்சு!

Nainar Nagendran: நாம் ஏன் ஆட்சி அமைக்க கூடாது என்று சிலர் பேசுவார்கள், அதை சிந்திக்க கூடிய நேரம் இதுவல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 14, 2025, 10:32 PM IST
'பாஜக ஆட்சி அமைக்க இது சரியான நேரமில்லை...' நயினார் நாகேந்திரன் மதுரையில் பேச்சு!

Nainar Nagendran: மதுரை விமான நிலையம் அருகே வளையன்குளம் தனியார் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இளைஞர்கள் இணையும் விழா இன்று (ஜூலை 14) நடைபெற்றது. 

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி தலைமையில் 5000 இளைஞர்கள் பாஜக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை, சால்வை அணிவித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

Madurai News: 2026 இபிஎஸ் ஆட்சி

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "மதுரையை சுற்றி சுற்றியே பாஜக வந்து கொண்டிருக்கிறது. அமித்ஷா மதுரை வந்தது மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறது. மதுரை பாஜகவுக்கு வெற்றியை தேடித்தரும். ஆனால் திமுகவுக்கு தோல்வியை தரும். ஏற்கனவே மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்திய பிறகு 12 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வர முடியவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையை அடைத்துள்ளது. எனவே 2026ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் வரும். இளைஞர்கள் தேசப்பற்றோடு தேசத்திற்காக பாடுபட பாஜகவிற்கு வர வேண்டும். சிறந்த ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்டவைகளை மோடி உருவாக்கியிருக்கிறார். உலகத்தில் சிறந்த தலைவராக உருவெடுத்துள்ளார் மோடி. இது சாதாரண கட்சி அல்ல தேசத்திற்காக உழைக்கும் கட்சி திமுக போல குடும்ப கட்சி கிடையாது. யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். வருகிற 2026ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்.

Madurai News: 2026இல் வெற்றி பெற உழைக்க வேண்டும்

அதிகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருக்கிறோம், நாம் ஏன் ஆட்சி அமைக்க கூடாது என்று சிலர் பேசுவார்கள், அதை சிந்திக்க கூடிய நேரம் இதுவல்ல. நமது ஒரே சிந்தனை திமுகவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பதுதான். மோடி, அமித்ஷா கூறினால் கூட்டணி, இல்லை என்றால் கூட்டணி இல்லை. நமது தலைவர்கள் பேசியது போல நம்முடைய ஒரே எண்ணம் 2026ஆம் ஆண்டில் வெற்றி பெற வேண்டும், அதற்கு உழைக்க வேண்டும்" என்றார்.

Madurai News: ஆதித்யா சேதுபதி பேச்சு

முன்னதாக பேசிய ஆதித்யா சேதுபதி, "ஜனநாயகத்திற்காகவும், மக்களுக்காகவும் 50 ஆண்டுகளாக உழைக்கும் கட்சி பாஜக. அதில் இணைவதில் பெருமை கொள்கிறேன்.
வாரிசுகளால் வளர்ந்த கட்சி அல்ல பாஜக. சாதாரண மனிதர் கூட பிரதமராக வந்திருக்கும் கட்சி பாஜக. பல லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் குறிப்பாக முத்ரா கடன் திட்டம் மூலம் நான்கரை கோடி மக்கள் தமிழகத்தில் பயன் பெற்றிருக்கிறார்கள்.

படித்தவர்கள் தொழிலாளியாக இல்லாமல் MSME திட்டத்தில் தொழிலதிபர்களாக மாற்றியுள்ளார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள், திராவிட கட்சியால் நமது சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கு இருக்கும் இளைஞர்கள் மக்களிடத்தில் பணத்தை கொள்ளையடித்து வெளிநாடு செல்பவர்கள் அல்ல. அநீதி, ஊழலுக்கு பெயர் போன மக்களுக்கும், பெண்களுக்கும் எதிரான ஆட்சியை விரட்டிவிட்டு மக்களுக்கு நன்மை செய்யும் பாஜக ஆட்சி தமிழகத்தில் வர வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ.50 ஆயிரம்... நலிவடைந்த பெண்களுக்கு ஸ்பெஷல் திட்டம்!

மேலும் படிக்க | புதிய தொழில் தொடங்க... தமிழக அரசின் 2 நாள்கள் சிறப்பு பயிற்சி - உடனே சேருங்க!

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் இலவச ஸ்கூட்டர் : யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News