பாஜக மாநில தலைவரானார் நயினார் நாகேந்திரன்... போட்டியின்றி தேர்வு!

Nainar Nagenthiran: தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 11, 2025, 04:04 PM IST
  • நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் ஆகிறது.
  • நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார்.
  • தமிழக பாஜகவின் 13வது மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்க வாய்ப்பு
பாஜக மாநில தலைவரானார் நயினார் நாகேந்திரன்... போட்டியின்றி தேர்வு!

Nainar Nagenthiran: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் பதிவுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, ஒன்றுக்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட விருப்பமனுவை தாக்கல் செய்யும்பட்சத்தில் ஏப். 12ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கூறப்பட்டது. இருப்பினும், பாஜக போன்ற தேசிய கட்சியில் ஒருவரே விருப்பமனுவை தாக்கல் செய்வார் என்றும் அவரை போட்டியின்றி தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

Add Zee News as a Preferred Source

Nainar Nagenthiran: கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் 

மேலும், இன்று மதியம் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை போட்டியிட விரும்புவோர் விருப்பமனுவை பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரன் கமலாலயத்திற்கு மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்ப மனுவை தாக்கல் செய்ய வருகை தந்தார்.

Nainar Nagenthiran: நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு

அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் கமலாலயம் வந்துள்ளனர். அந்த வகையில், தற்போது அண்ணாமலை நயினார் நாகேந்திரனை பரிந்துரைக்க, நயினார் நாகேந்திரன் தனது விருப்பமனுவை தாக்கல் செய்தார். அண்ணாமலை மட்டுமின்றி எல்.முருகன், ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தனர். மேலும், மாநில தலைவர் பதவிக்காக வேறு யாரும் விருப்பமனுவை சமர்பிக்காதபட்சத்தில் அவரே மாநிலத் தலைவராக போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக விருப்பமனுவை தாக்கல் செய்த பின் கமலாலயத்திற்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,"கட்சியின் அறிவுறுத்துதலின் பேரில் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளேன்" என்றார். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விருப்பமனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Nainar Nagenthiran: நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமலாலயத்தில் அண்ணாமலை பெயர் பலகையில் அவரது பெயர் அழிக்கப்பட்டது. பாஜக தொண்டர்கள் கமலாலயத்தின் வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர். நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு நாளை சென்னை அடுத்த ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக கட்சியின் மாநில தலைவர் தேர்தல் அதிகாரியான கிஷன் ரெட்டி மற்றும் தருண்சுக் ஆகியோர் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப். 12) நடைபெறும் நிகழ்வில் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Nainar Nagenthiran: அமித்ஷா நிகழ்ச்சியில்...

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சென்னைக்கு வருகை தந்துள்ளது, தமிழ்நாடு அரசியலில்ல ஏற்கெனவே பெரும் பரபரப்பை உண்டாகி உள்ளது. சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் சுமார் 3 மணிநேரமாக தொடங்காமல் தாமதம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிகழ்ச்சியின் மேடையில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பேனரில் நயினார் நாகேந்திரனின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. எனவே, நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

Nainar Nagenthiran: நயினார் நாகேந்திரனும்... பாஜகவும்...

நயினார் நாகேந்திரன் அதிமுகவில் அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார். இவர் அதிமுகவில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2019இல் ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே வேளையில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். எம்எல்ஏ ஆக இருந்தாலும் இவர் கடந்த 2024 மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர ஆலோசனை! அடுத்த பாஜக தலைவர் யார்?

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News