)
Nainar Nagenthran About TVK Vijay: மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 50வது நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, மணிப்பூர் மற்றும் கும்பமேளா போன்ற இடங்களுக்கு பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் செல்லவில்லை என செந்தில் பாலாஜி பேசியது குறித்த கேள்விக்கு, "கும்பமேளா சம்பவம் எப்படி நடந்துச்சு என்று அனைவருக்கும் தெரியும். கும்பமேளாவிற்கு 64 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வந்தார்கள்.
கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள், சிறிய குழந்தைகள் முதல் பெண்கள் என பலதரப்பினர் இறந்து உள்ளனர். தமிழக வெற்றி கழகம் கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை, காவல்துறை தடியடி செய்வதற்கு அவசியம் என்ன, மின்சாரத்தை யார் ஆப் செய்தது, செருப்பை யார் தூக்கி அடித்தது, முதலமைச்சர் வரும்போது மட்டும் ஏன் ரவுண்டானா போன்ற பெரிய இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள், இதையெல்லாம் அவர்கள் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
தனிநபர் ஆணையம் விசாரணை செய்து கொண்டிருக்கும் போது அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்திப்பது நிச்சயமாக தவறு. நானாக ஒன்றும் சொல்லவில்லை, நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்" என்றார்.
மேலும், விஜய் பாஜக பிடியில் இருப்பதாக திருமாவளவன் உள்ளிட்டோர் கூறுவது குறித்த கேள்விக்கு, "பாஜக எங்களுடைய எதிரி என்று விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் எப்படி விஜய் பாஜக கைபிடியில் இருக்கிறார் என்று சொல்ல முடியும்" என்றார். மேலும், கரூர் விவகாரத்தில் பாஜக உண்மை கண்டறியும் குழு என்ன எழுதி கொடுத்து இருக்கிறார்கள் என தெரிந்தபின்னரே தெரியும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருவண்ணாமலையில் இரண்டு காவலர்கள் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த கேள்விக்கு,"இது இன்று நேற்று நடக்கும் செயல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேலியே பயிரை மேய்வது போல் இதுபோன்ற செயல்களை நடைப்பெற்று கொண்டுதான் உள்ளது. காவல்துறையில் காமுகர்கள் நிறையபேர் தமிழகத்தில் இருக்கின்றனர். அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் காவல் துறையை கையில் வைத்திருக்கிறார் முதலமைச்சர். ஆனால், அவரது கட்டுப்பாட்டில் இந்தத் துறை இல்லை" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ