)
Nalam Kaakkum Stalin : தமிழ்நாடு முழுவதும் வாரந்தோறும் சனிக்கிழமை "நலம் காக்கும் ஸ்டாலின் "உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு என்னென்ன நோய்களுக்கு சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன, காப்பீடு அட்டை பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இதுவரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் வழங்கப்படும் 17 சிறப்பு மருத்துவ சேவைகளின் பட்டியல்
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு சிகிச்சை, மகப்பேறு மருத்துவ சிகிச்சை, குழந்தைகள் நல மருத்துவம், இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை சிகிச்சை(பிசியோதெரபி), ஊடுகதிர் மருத்துவம் (ரேடியலாஜி). சுவாச மண்டலம் மருத்துவம், நிரிழிவு நோய் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம் (ஆயுர்வேதம் /யோகா/யுனானி/ சித்தா/ஓமியோபதி) உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது. மருத்துவ காப்பீடு அட்டையும் தேவைப்படுபவர்களுக்கு இந்த முகாமில் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த வாலாஜாவைச் சார்ந்த மாற்றுத்திறனாளி வாசுதேவன் அவர்கள் தெரிவித்ததாவது:
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் என்னுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பழைய அட்டையினை 1 மணி நேரத்திற்குள்ளாகவே மாற்றி
புதிய அட்டையினை வழங்கிவுள்ளார்கள். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் வெளியில் சென்றுவர வேண்டுமென்றால் ஒருவருடைய தயவின்றி சென்று வருவது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்நிலையில் இம்முகாம் எங்களுடைய பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் என்னைப் போன்ற
மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும், இம்முகாமில் மருத்துவ பரிசோதனைகளையும் செய்துகொண்டேன். மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் என்னிடம் மிகவும் கனிவுடன் நடந்துகொண்டார்கள். ஆகவே, இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்கடப்பந்தாங்கல் ஊராட்சி, அமரன் நகர் கிராமத்தைச் சார்ந்த பயனாளி திருமுருகன அவர்கள் தெரிவித்ததாவது:
நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக சக்கரை நோயால் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் காலில் காயம் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகின்றேன். தற்பொழுது நலம்காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் என்னை அறுவை சிகிச்சை மருத்துவர் பரிசோதித்து காயம் சரியாவதற்கான மருந்தினை கொடுத்துள்ளார். இம்முகாமில் உள்ள மருத்துவர்கள் எங்களை போன்ற நோயாளிகளை நன்றாக கவனிக்கின்றார்கள். எனக்கு தற்பொழுது மனம் நிறைவாக உள்ளது. மேலும், அடுத்தவாரம் பரிசோதனை மேற்கொள்ள ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு வரசொல்லி இருக்கின்றார்கள். ஆகவே, இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடிமல்லூர் கிராமத்தைச் சார்ந்த பயனாளி தெரிவித்ததாவது:
என்னுடைய மனைவி பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் அவதியுற்று வருகின்றார். இந்நிலையில் நலம்காக்கும் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவதாக அறிந்து, மருத்துவ பரிசோதனை செய்தேன். இம்முகாமில் உள்ள மருத்துவர்கள் பரிசோதனைகளை ஒவ்வொன்றாக செய்தனர். நாங்கள் இதற்கு முன்பு
தனியார் மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றோம். ஆனால் அதனைக்காட்டிலும், இம்முகாமில் கலந்து கொண்டு எந்தவொரு அலைகழிப்பின்றி பரிசோதனைகள் செய்தது எங்களுக்கு மனம் நிறைவாக உள்ளது. இத்திட்டம் எங்களை போன்ற ஏழை எளியமக்களுக்கு வரப்பிரசாதம். ஆகவே, இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பயனாளிகள் கூறினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ