)
Nalam Kaakum Stalin Medical Camp : என் உயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் மக்கள் மக்கள் நல்வாழ்த்துறை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்த்துக்கள் செயல்பாடுகளை கேட்டு அறிந்து அதற்கான ஆவணங்களை பெற்று திட்டத்தை துவங்கி உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் முதல் மாதிரியாக மிக சிறப்பாக செய்து வருகிறார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மணலி மண்டலம் மாத்தூரில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகைக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
மருத்துவ முகாம்:
இந்த மருத்துவ முகாமில் இரத்த பரிசோதனை ,இசிஜி மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் பொது மருத்துவம், இருதயம் ,எலும்பு, நரம்பியல் ,தோல், மற்றும் மகப்பேறு போன்ற பல்வேறு மருத்துவங்கள் 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. கடந்த வாரம் வரை நடைபெற்ற 112 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 1,48,290 பேர்கள் மருத்துவ பயன்பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகைக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். இந்த மருத்துவ முகாமில் இரத்த பரிசோதனை ,இசிஜி மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் பொது மருத்துவம், இருதயம் ,எலும்பு, நரம்பியல் ,தோல், மற்றும் மகப்பேறு போன்ற பல்வேறு மருத்துவங்கள் 17 வகையான சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மா.சுப்பிரமணியன் பேட்டி:
“மக்களைத் தேடி மருத்துவம் , என் உயிர் காப்போம் நம்மை காக்கும் 48 இதயம் காப்போம் நடப்போம் நலம் பெறுவோம் சிறுநீரக பாதுகாப்பு சீர்மிகு திட்டம் மக்களை தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம் தொழிலாளர்கள் தேடி மருத்துவ திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது
மக்களை தேடி மருத்துவ மகத்தான திட்டம் 2 கோடி பயனாளிகளை தாண்டி நிலையில் ஐநா மன்றம் கடந்த ஆண்டுக்கான மகத்தான விருது வழங்கி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டியின் பேரில் என் உயிர் காப்போம் நம்மை காப்போம் 48 இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் மக்கள் மக்கள் நல்வாழ்த்துறை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்த்துக்கள் செயல்பாடுகளை கேட்டு அறிந்து அதற்கான ஆவணங்களை பெற்று அவர்களும் செயல்படுத்த துவங்கி உள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் முதல் மாதிரியாக மிக சிறப்பாக செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 388 ஒன்றியங்களில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மூன்று மூன்று முகாம்கள் என்கின்ற வகையிலேயும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 5 என்கின்ற வகையிலேயும் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளுக்கு தல 4 என்கின்ற வகைகளிலேயும் பெருநகர சென்னை மாநகராட்சி பொருத்தவரை 15 மண்டலங்களுக்கு 15 முகாம்கள் என்கின்ற வகையிலேயும் 1256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை மூன்று வாருங்கள் இந்த முகாம்கள் நடைபெற்று முடிந்து நான்காவது வாரமாக இன்றைக்கு இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதிலும் இதை தொடங்கியிருக்கிறோம்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ