New Central Square Tower : சென்னை சென்ட்ரலின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படும் New Central Square Tower திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . சென்ட்ரலின் லுக்கையே மாற்ற இருக்கும் இந்த ப்ராஜெக்ட் எப்போது பயன்பாட்டிற்கு வரும் இது குறித்த முழு அப்டேட்டை பார்க்கலாம்.
சென்னை சென்ட்ரல்:
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகே உள்ள மத்திய சதுக்கத்தில் (Central Square) அமைந்துள்ளது இந்த New Central Sqaure Tower மற்றும் Central square plaza சென்னை சென்ட்ரலில் முக்கிய அடையாளமாக மாற உள்ள 27 மாடிகள் கொண்ட இந்த வணிக வளாகம், 350 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
சென்னையின் மத்தியப் பகுதியில் புது அடையாளமாகவும் , போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கம். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) இணைந்து உருவாக்கியுள்ள இதனை சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் செயல்படுத்துகிறது.
என்னென்ன இருக்கிறது?
இந்த New Central square Tower 14,280 சதுர மீட்டர் பரப்பளவில் 120 மீட்டர் உயர கோபுரத்துடன் அமைய உள்ளது. இது , நவீன சில்லறை வணிகம், அலுவலகங்கள் மற்றும் வணிக இடங்களின் கலவையாக இருக்கும். தரைத்தளம் முதல் நான்காம் தளம் வரை சில்லறை மற்றும் வணிகக் கடைகள் அமையும்.
5 முதல் 24-ஆம் தளங்கள் அலுவலக இடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 25-வது தளம் சேவை வசதிகளுக்காகவும், மேல் இரண்டு தளங்கள் பிரீமியம் வணிக இடங்களாகவும் செயல்படும். நான்கு அடுக்கு அடித்தளத்தில் வாகன நிறுத்தம் மற்றும் பிற வசதிகள் இருக்கும். இங்கு 586 கார்கள் மற்றும் 1,652 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்ட்ரல் டவர் பிளாசா .சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புறநகர் சென்ட்ரல் ரயில் முனையம், பார்க் ரயில் நிலையம், (MRTS), சென்னை மெட்ரோ நிலையம், ரிப்பன் கட்டிடங்கள் மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு இடையே தடையற்ற இணைப்பை உருவாக்குகிறது
இப்போது என்ன நடக்கிறது?
சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த நியூ சென்ட்ரல் ஸ்கொயர் டவர் மற்றும் சென்ட்ரல் ஸ்கொயர் பிளாசாவீின் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் அவை தற்போது குறிப்பிட்ட அளவு கட்டுமான பணிகளை நிறைவு செய்துள்ளது
இந்த சென்ட்ரல் டவர் சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாகவும், நகரத்தின் கவர்ச்சியை மேம்படுத்தும் ஒரு முக்கிய வணிக மையமாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் முக்கிய போக்குவரத்து மையமான மத்திய சதுக்கத்தில் அமைந்துள்ளது.
மத்திய சதுக்கத் திட்டம் செப்டம்பர் 2015 அப்போதைய அரசால் முன்மொழியப்பட்ட நிலையில் , கடலோர மண்டல அனுமதி மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் காரணமாக திட்டம் தாமதமானது குறிப்பிடத்தக்கது. தற்போது Central Sqaure Tower பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த வருடம் இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் மெட்ரோ இரயில், புறநகர் இரயில், நீண்ட தூர இரயில்கள் மற்றும் பேருந்து சேவைகளை என அனைத்தையும் எளிதாக இணைக்கும் multi-modal transport hub ஆக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | இராஜேந்திர பாலாஜியை அழைத்து EPS திட்டி இருக்க வேண்டாமா...? - செல்வப்பெருந்தகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









