TNEB : தமிழ்நாட்டில் புதிய வீடு கட்டியவர்கள் மின் இணைப்பு பெற வேண்டும் என்றால் வீட்டு நிறைவுச் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இப்போது அதில் இருந்து தமிழ்நாடு மின்சார வாரியம் விலக்கு அளித்திருக்கிறது. அதனால், புதிய வீடு கட்டியவர்கள் தற்காலிக மற்றும் புதிய மின் இணைப்புக்கு எப்படி விண்ணபிக்க வேண்டும்? என்பதை முழுமையாக இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய மின் இணைப்பு தேவையான ஆவணங்கள் :
உங்கள் ஊரில் இருக்கும் மின்சாரத்துறை அலுவலகத்துக்கு செல்லுங்கள். புதிய வீடு கட்டப்படுவது குறித்த தகவலையும், அதற்காக தேவைப்படும் தற்காலிக மின் இணைப்பு மற்றும் நிரந்த மின் இணைப்பு குறித்து தெரிவிக்கவும். அப்போது, மின் இணைப்புக்காக முறைப்படி எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என அங்கே வழிகாட்டுவார்கள். வீட்டின் உரிமையாளர் என்றால் சொத்து வரி ரசீது, ஆதார் அட்டை புகைப்படம் ஆகியவை கட்டாயம் தேவை. ஒருவேளை வீட்டின் உரிமையாளர் இல்லை என்றால் வீட்டின் உரிமையாளரிடமிருந்து படிவம் 5 போன்று பெறப்பட்ட கடிதம் அல்லது விண்ணப்பதாரர் அந்த வீட்டில்தான் வசிக்கிறார் என்பதற்கான சான்றான படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாருக்கு 112KW அதிகமாக மின் அளவு தேவை என்றால், அவர்கள் அதற்குரிய படிவங்களை ஸ்கேன் செய்து அதன் பிடிஎஃப்-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
TNEB புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
- முதலில் TANGEDCO இணையதளத்திற்குச் சென்று, அதில் உள்ள ‘Apply’ என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.
- புதிய மின் இணைப்பு பெற விரும்பும் மாவட்டம், வட்டம், பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
- மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவருக்கு தேவையான மின் வகை, ஒயரிங் செய்யப்பட்ட தேதி, எத்தனை ஃபேஸ் (phase) இணைப்புத் தேவை போன்ற தகவல்களுடன் தேவையான விபரங்களை பதிவு செய்யவேண்டும்.
- அடையாளச் சான்றிதழ் (identity proof), சொத்துக்கான உரிமையாளர் சான்றிதழ் (proof of ownership) மற்றும் உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட கட்டிட நிறைவுச் சான்றிதழ் (completion certificate) போன்ற தேவையான அனைத்து ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். (குறிப்பு: மூன்று யூனிட்டுகளுக்கு குறைவான, 12 மீட்டர்கள் வரையிலான குடியிருப்பு கட்டிடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் நிறைவுச் சான்றிதழ் வழங்கத் தேவையில்லை).
- உங்களுடைய விண்ணப்பத்திற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பின்னர், உங்களுக்கான விண்ணப்ப எண் திரையில் தோன்றும். எதிர்காலத் தேவைக்காக இந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தும்போது இந்த எண்ணையே பயன்படுத்த வேண்டும்.
இந்த ஆவணங்கள் தேவையில்லை
- விண்ணப்பதாரர்கள் மின் இணைப்புக்காக விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்துடன் காகித வடிவச் சான்றுகள் (hard copies) எதையும் இணைக்க, சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- வீடுகள் தவிர்த்த அடுக்குமாடி கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு மின் இணைப்பு பெறும்போது கையெழுத்திடப்பட்ட விண்ணப்பம் மற்றும் சுயசான்றழிக்கப்பட ஆவணங்களை மின் விநியோகம் அளிக்கப்படுவதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
- 12 மீட்டர் உயரம் அல்லது 750 சதுர மீட்டர் வரையிலான குடியிருப்பு கட்டிடங்கள், அனைத்து வகையான தொழில் நிறுவனக் கட்டிடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
- கட்டணங்களை ஆன்லைன் மூலமாக செலுத்தும்போது உங்களுடைய விண்ணப்ப எண்ணை பயனர் பெயராகவும் (username), உங்களுடைய மொபைல் எண்ணை பாஸ்வேர்டாகவும் பயன்படுத்த வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









