செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் – கலா தம்பதியினர். இவர்களது மகன் இராஜ் (32 வயது), இவர் எஸ்.எஸ்.என் கல்லூரியில் மின் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இன்று 12 ஆம் தேதி திருப்போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி மணமகன் ராஜ் தான் வேலை செய்யும் கல்லூரியில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழைக் கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போக்குவரத்து போலிசார் எஸ்.எஸ்.என் கல்லூரி வாசலின் அருகே சிறிது தூரத்தில் பேரிகார்டு அமைத்து வாகன தணிக்கையில் இடுபட்டு இருந்தனர்.


அப்போது போக்குவரத்து போலிசார் புது மாப்பிள்ளை ராஜியின் இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமால் சென்ற போது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவற்றில் மீது கிழே விழுந்தார். இவரது பின்னால் ஸ்பிலண்டர் பைக்கில் ஒரு பெண்மணி மற்றும் ஒரு இளைஞர் வந்துள்ளனர்.



அப்போது போலீசார் மடக்கி நிற்கமால் சென்று கிழே விழுந்த ராஜி பைக்கின் மீது அவரது மோதி இருசக்கர வாகனத்தின் மீது மோதி கிழே விழுந்தனர். கீழே விழுந்ததில் கை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறிய மணமகன் ராஜ் சாலைத் தடுப்பில் மோதி ராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் சென்னை மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 


இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விபத்தில் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.