இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவின் இந்த 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம் தமிழ்நாடு (Tamil Nadu) முழுவதுமே ஆக்ஸிஜன் (Oxygen) வசதியுடன் கூடிய படுக்கைகள் மிக வேகமாக நிரம்பிவருகின்றன. அத்துடன் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைப்பதற்கு பல மருத்துவமனைகளில் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) ஏற்படும் இறப்பைக் குறைக்கும் நோக்கில் கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக மருத்துவம் மக்கள் நல் வாழ்வுத்துறை.


ALSO READ | கொரோனாவுக்கு மாட்டுச் சாணம் சிகிச்சை: இந்திய மருத்துவ சங்க தலைவர் எசரிக்கை!


தமிழகத்தில் தற்போது இறப்பு எண்ணிக்கை 2 நாட்களுக்கும் மேலாக 250-ஐ நெருங்கி பதிவாகி வருகிறது. இதையடுத்து, தொற்று நோய் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தமிழக அரசின் கோவிட் சிறப்பு நிபுணர் குழு உள்ளிட்ட மருத்துவர்கள் இணைந்து புதிய சிகிச்சை வழிகாட்டு முறைகளை வகுத்தளித்தனர். இது அரசாணையாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த நெறிமுறைகளின்படி நோயின் கடுமை, அறிகுறிகளை வைத்து நோயாளிகள் நான்கு கட்டங்களாக பிரிக்கப்படுகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் செறிவு 96க்கு மேலே உள்ள நபர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


இந்த அரசாணைப்படி கோவிட் நோயாளிகள் 4 வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.
1. வீட்டுத்தனிமையில் இருப்பவர் 
2. வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருப்போர் 2-ஆம் வகை
3. கொரோனா சிகிச்சை மையங்கள் , கொரோனா பராமரிப்பு மையங்களில் இருப்போர்
4. மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுவோர்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR