)
தமிழகத்தில் 2025 அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கிய சில நாட்களிலயே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது புயலாக வலுவடையாமல், வலுப்பெற்றது. தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதி வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோந்தா என பெயரிடப்பட்டது. மோந்தா புயல் அக்டோபர் 28ஆம் தேதி மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே கரையை கடந்தது. அப்போது, ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் மோந்தா புயல் புரட்டி எடுத்தது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது.
இந்த மோந்தா புயல் தமிழக்ததை நெருங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அது ஆந்திரா கடற்கரையை நோக்கி சென்றால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும், மோந்த புயல் காரணமாக தமிழக்ததில் கனமழை பிச்சு உதறியது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டிய நிலையில், தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை தற்போது நின்றுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு மழையின் தாக்கம் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில், சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, நேற்று (அக்டோபர் 30) மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 31) காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு வடகிழக்கு திசையில், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் வழியாக குஜராத் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு மியான்மார் கடலோர பகுதிகளிள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 2025 அக்டோபர் 31ஆம் தேதியான இன்று முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 2025 அக்டோபர் 31, நவம்பர் 1ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ