ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல புதிய கட்டுப்பாடு! தமிழக அரசு அறிவிப்பு!

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2025, 09:21 AM IST
  • சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ்.
  • ஊட்டி, கொடைக்கானலுக்கு கட்டுப்பாடு.
  • உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமல்.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல புதிய கட்டுப்பாடு! தமிழக அரசு அறிவிப்பு!

ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இ-பாஸ் முறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது மற்றும் உள்ளூர்வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகிய நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பலரும் விடுமுறை தினங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற கூலிங்கான இடங்களுக்கு செல்ல விருப்புகின்றனர். இதனால் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த E Pass நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் இறுதி வரை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிங்க: டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம்! RPM படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்!

E Pass நடைமுறையில் கட்டுப்பாடு

தற்போது வரை விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் இபாஸ் வழங்கபட்டு வரும் நிலையில், இன்று முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.

ஆனால் இந்த கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்று அவசரக்கால வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நள்ளிரவு முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்ட எல்லைக்கு உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட சோதனைசாவடிகளில் இ-பாஸை தீவிரமாக சோதனை செய்து வாகனங்களை அனுமதிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடை அடைப்பு

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, நீலகிரிப் பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிப்படுவார்கள் என்று உள்ளூர் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் புதிய இ-பாஸ் முறையை அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, இப்பகுதிக்கு வருகை தர விரும்பும் சுற்றுலாப் பயணிகள், சுமூகமான பயண அனுபவங்களை எளிதாக்குவதற்கும் முன்கூட்டியே மின்னணு அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிங்க: 2026-ல் தமிழக முதல்வர் ஆவது யார்? சி வோட்டர் கணக்கெடுப்பில் மக்கள் சொன்ன பெயர்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News