இயற்கை அழகை கண்டு ரசிக்க ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

ஊட்டி மலை ரயில் சேவை: கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Dec 22, 2021, 01:00 PM IST
இயற்கை அழகை கண்டு ரசிக்க ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் title=

ஊட்டி மலை ரயில் சேவை: மேட்டுப்பாளையம் உதகமண்டலம் இடையிலான மலை ரயில் போக்குவரத்து இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் துவங்கியது. ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நிறைவுற்றதால் 180 சுற்றுலா பயணிகளுடன் மலைரயில் உதகைக்கு புறப்பட்டுச் சென்றதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்தில் தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது 

கல்லார் முதல் குன்னூர் அடர்ந்த வனத்தில் பயணிக்கும் நூற்றாண்டு பழமை மிக்க இந்த மலை ரயிலில் பயணித்து, இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக பருவ மழை பெய்தது. இதன் காரணமாக மழை ரயில்பாதை அமைந்துள்ள கல்லார், ஹில்குரோ, ஆடர்லிபோன்ற பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததால் ரயில்பாதை முற்றிலும் சேதமடைந்தது.

ALSO READ | கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தை பந்தாடிய காட்டுயானை

இதன் காரணமாக மலை ரயில் போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வந்த நிலையில், நவம்பர் இருபத்தி மூன்றாம் தேதி முதல் மலை ரயில் போக்குவரத்து தொடர்ந்து மண்சரிவு ஏற்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்க படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து, இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது 7:10 மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகமண்டலத்திற்கு 180 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டு சென்றது

இதனால் முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ALSO READ | நீலகிரி மலை ரயிலால் அரசிற்கு ரூ.26 கோடி இழப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News