நிவர் புயல்... சென்னையில் கோவிட்-19 பாதிப்பு இனி என்னாகும்?

தமிழக அரசு அறிவித்த பொது விடுமுறை காரணமாக புதன்கிழமை கோவிட் -19 சோதனைகளில் சிலவற்றை மட்டுமே செய்ய முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 25, 2020, 08:44 PM IST
    1. இந்த 6 சதவிகிதம் பேருக்கும் நோய் பரவிட காரணம், மீதமுள்ள 94 சதவிகிதம் பேர்தான்.
    2. நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பலத்த பெய்து வருகிறது.
    3. நகரம் 10,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 சோதனைகளை நடத்தியது.
நிவர் புயல்... சென்னையில் கோவிட்-19 பாதிப்பு இனி என்னாகும்? title=

சென்னை: கோவிட் -19 மற்றும் சூறாவளி இரண்டையும் ஒரே மாதிரியாக சமாளிக்க முடிந்தது. மேலும் தொடர்ச்சியான கோவிட் -19 பரிசோதனை வழியில் கனமழையின் பாதிப்பு எந்தவித தொய்வையும் ஏற்படுத்தவில்லை என்று சென்னை சுகாதார ஆணையர் தெரிவித்துள்ளார். 

கொரோனா (Coronavirus) இன்னும் நம்மை விட்டுச் செல்லவில்லை. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், எண்ணிக்கையில் தினமும் குறைவான தொற்று தொற்றாளர் இருந்தாலும், நம்மில் பலர் நோய்த்தொற்று ஏற்பட்டு அதனுடன் தான் வாழ்கின்றனர் என்பதே உண்மை.

ALSO READ | நிவர் புயல்: ரயில் சேவைகள் ரத்து; பணத்தை எவ்வாறு திரும்பப்பெறுவது? தெற்கு ரயில்வே விளக்கம்!

இந்த 6 சதவிகிதம் பேருக்கும் நோய் பரவிட காரணம், மீதமுள்ள 94 சதவிகிதம் பேர்தான். தற்சமயம் குறைந்திருப்பது இந்த 94 சதவிகிதம் பேருக்கு வரும் தொற்றுதான். அந்த மோசமான பாதிப்புக்கு நகர்ந்து போகும் 6 சதவிகிதம் பேருடைய பாதிப்பு அப்படியேதான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது நிவர் புயல்  (Nivar Cylone) காரணமாக தமிழகத்தில் பலத்த பெய்து வருகிறது. சென்னையில் செவ்வாக்கிழமை அதிக மழை பெய்தது, இருப்பினும், நகரம் 10,000 க்கும் மேற்பட்ட கோவிட் -19 (Covid-19) சோதனைகள் நடத்தப்பட்டது.

ALSO READ | கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

கூட்டு சுகாதார ஆணையர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன், ஒரு ஊடக இல்லத்துடன் பேசியபோது, கார்ப்பரேஷன் காய்ச்சல் முகாம்களை அமைத்துள்ளதுடன், குறிப்பாக வணிக இடங்களில் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. மக்களும் முன்வந்து அதிகாரிகளுடன் ஒத்துழைத்தனர் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும், தமிழக அரசு அறிவித்த பொது விடுமுறை காரணமாக புதன்கிழமை கோவிட் -19 சோதனைகளின் ஓரளவு மட்டுமே செய்ய முடிந்தது. 

இதற்கிடையில் நிவர் புயல் (Cycloneவெள்ள முகாம்களில் மக்களை தங்க வைக்கும்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

ALSO READ | நிவர் புயல் அச்சம்: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்த முதல்வர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News