கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றுக்கு தளர்வுகளை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் (28.01.2022) முதல் இரவு ஊரடங்கு ரத்து என அறிவித்துள்ள தமிழக அரசு, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் முழு ஊரடங்கும் கிடையாது என அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | தொற்று எண்ணிக்கையில் ஏற்றம், கட்டுப்பாடுகளில் தளர்வு: நெதர்லாந்தின் வினோத முடிவு


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை, 1.02.2022 முதல் நேரடி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மழலையர் பள்ளிகள் (Play Schools) மற்றும் எல்.கே.ஜி, யு.கே.ஜி ஆகியவற்றுக்கான தடை தொடரும். கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகளை தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் முழுநேரம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிய முன்னேற்பாடுகளை சமந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


ALSO READ | ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் விதிகளை மீறியவர்களிடம் ரூ.7,89,400 வசூல்!


இவற்றை தவிர்த்து உணவகங்கள், விடுதிகள், சலூன்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், உள்விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றில் 50 விழுக்காடு நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் (Entertainment/Amusement) செயல்பட அனுமதியில்லை. மற்ற பூங்காக்கள் திறக்கப்படும். உள்விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு போட்டிகளை நடத்தலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR