நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் எந்த போராட்டமும் நடைபெற அனுமதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூரியதாவது: மாக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிக்கும் வகையினில் எந்தவிதமான போராட்டமோ அல்லது சம்பவங்களை செய்யும் நபர்கள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.


முன்னதாக நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவ கனவு பறிபோனதால் கடந்த 1-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நீதி விசாரணை அமைக்க வேண்டும் என பலர் கூறிவருகின்றனர்.


இந்நிலையில் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமற்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு நீதி விசாரணை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். 


இன்று உச்ச நீதிமற்றத்தில் இந்த மனு மீதான விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.