)
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், திமுக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்தும் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தினர்.
கூட்டம் முடிந்து சட்டமன்ற உறுப்பினரும் தொகுதி பொறுப்பாளரும் சென்ற பிறகு 3 ஒன்றிய செயலாளர்கள் மூலமாக வந்திருந்த வாக்குச்சாவடி இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 300க்கும் மேற்பட்டோருக்கு மதுவுடன் (பீர் பாட்டிலுடன்) கூடிய அசைவ விருந்து வைக்கப்பட்டுள்ளது. சாப்பாட்டு மேஜையின் மீது இலையுடன் ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள், புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மது ஒழிப்பு, பெரியார் கொள்கை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என திமுக தலைமை பேசி வரும் நிலையில், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் இளைஞர்களுக்கு மதுவுடன் கூடிய அசைவ விருந்து வைத்த சம்பவம் அனைவரிடமும் பேசுபொருளாய் மாறி உள்ளது. இதற்கு திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இது தான் திமுக..
— BJP Madathukulam Assembly Constituency (@MDKMDivisionBJP) April 28, 2025
கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் சட்ட மன்ற தொகுதி ஒன்றிய வாக்கு சாவடி இளைஞரணி(ம)து அமைப்பாள
யிலுக்கு இதமாக கூலிங் பீர், கறிவிருந்து வழங்கிய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் மற்றும் இரிஷிவந்தியம் MLA வசந்தம் K.கார்த்திகேயன் அவர்கள்.#Beer #DMK #DMKFailsTN pic.twitter.com/mHiCyt4plK
#கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம் திமுக வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டத்தில் அசைவ விருந்துடன் பீர் பாட்டில் விருந்து.
— Drake (@bat231_) April 28, 2025
போதைப் பொருட்களை வளர்த்து விடும் திமுக.
Beer bottles at booth meetings, this is DMK’s true face. #TamilNadu #Chennai #DMKFailsTN pic.twitter.com/rNzMquVS6b
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ