)
Tamil Nadu government : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் சூழலில், மழைகாலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், காற்று மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் அருகில் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதை தொடாமலும் அருகில் செல்லாமலும் இருப்பதோடு, உடனடியாக அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்
மேலும், மின் பாதைக்கு அருகில் உள்ள மர கிளைகளை மின் ஊழியர் துணையோடு மட்டுமே வெட்ட வேண்டும். மின் மாற்றிகள் மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது. மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடக்கூடாது டிரான்ஸ்பார்மர்கள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான எச்சரிக்கை
மின் கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தகூடது. அவற்றில் கால்நடைகளை கட்டக்கூடாது. இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள், துணை மின் நிலையங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடையக்கூடாது. நுகர்வோர்கள் தன்னிசையாக மின் மாற்றங்களில் எரி எதையும் மாற்றக்கூடாது என அரசு எச்சரித்துள்ளது.
இடி மின்னலின் போது டி.வி. மிக்சி, கிரைண்டர், கணினி போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும். மேலும் வீட்டினில் எர்த்தினை முறையாக பராமரிக்க வேண்டும். வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால். உடனடியாக உலர்ந்த ரப்பர் காலணியே அணிந்து, மெயின் சுவிட்ச்சை நிறுத்த வேண்டும் மெயின் சுவிட்ச்சை நிறுத்தாமல் வீட்டினுள் மின் பழுது பார்க்கக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புகார்கள் தெரிவிப்பது எப்படி?
பவர் பிளக்கினில் கைவிரல், குச்சி, கம்பிபோன்றவற்றை நுழைக்கக் கூடாது. சுவிட்சை நிறுத்திய பிறகே மின் விசிறி, அயன்பாக்ஸ், வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை இணைக்கவோ, துண்டிக்கவோ வேண்டும். செல் போன்கள் சார்ஜில் இருக்கும் போது பயன்படுத்த வேண்டாம். மழைக்காலத்தில் பொது மக்கள் மின் விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் அரசின் வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. பொது மக்கள் மேற்கூறிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து மின் பாதிப்பு ஏற்படாமல் அதிக எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுகொள்ளப்படுகிறது. மின்சாரம் குறித்து அனைத்து புகார்களையும் 24X7 முழுநேரமும் இயங்கும் மின்னகம் 9498794987 என்ற புகார் மையத்திற்கு தெரிவிக்கலாம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களின் தொலைபேசி எண்களுக்கு மழை வெள்ள தகவல்களை தெரிவிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை உடனுக்குடன் பெறவும், தமிழ்நாடு அரசு, Sachet மற்றும் TN-Alert App-களை உருவாக்கியுள்ளது. இதனை Play Store-ல் இருந்து பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாக தற்போதைய வானிலை முன்னறிவிப்பு, மழை இடியுடன் கூடிய எச்சரிக்கை போன்று பல்வேறு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இதில் பொதுமக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களையும் தெரிவிக்க வசதிகள் உள்ளன. மேலும், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம் அறை எண்.120 மற்றும் 121 -இல் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு பொதுமக்கள் தங்களது இயற்கை பேரிடர் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களையும், புகார்களையும் இதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077, தரைவழி தொலைபேசி எண்.0427-2452202 ஆகிய எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
சேலம் கோட்டத்திற்கு தொலைபேசிஎண் 0427-2904666, அலைபேசி எண் 94450-00433 என்ற எண்ணிலும், ஆத்தூர் கோட்டத்திற்கு தொலைபேசிஎண் 04282-251400 அலைபேசிஎண் 94450-00434. மேட்டூர் கோட்டத்திற்கு தொலைபேசிஎண் 04298-244063 அலைபேசிஎண் 94450-00435 என்ற எண்ணிலும், சங்ககிரி கோட்டத்திற்கு தொலைபேசிஎண் 04283-240242 அலைபேசிஎண் 94450-00436 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.
மேலும், சேலம் வட்டத்திற்கு தொலைபேசிஎண் 0427-2452121 அலைபேசிஎண் 94450- 00547என்ற எண்ணிலும், சேலம்மேற்கு வட்டத்திற்கு தொலைபேசிஎண் 0427-2335611 அலைபேசிஎண் 93840.94162 என்ற எண்ணிலும், சேலம்தெற்கு வட்டத்திற்கு தொலைபேசிஎண் 0427-2271600 அலைபேசிஎண் 94454-61858 என்ற எண்ணிலும், ஏற்காடு வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04281-222267 அலைபேசிஎண் 94450-00548 என்ற எண்ணிலும், வாழப்பாடி வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04292-223000 அலைபேசிஎண் 94450-00549 என்ற எண்ணிலும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04282-221704 அலைபேசி எண் 93840-94217 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோன்று, ஆத்தூர் வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04282-240704 அலைபேசிஎண் 94450-00550 என்ற எண்ணிலும், கெங்கவல்லி வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04282-232300 அலைபேசிஎண் 94450-00551 என்ற எண்ணிலும், தலைவாசல் வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04282-290907 அலைபேசிஎண் 93840-94206 என்ற எண்ணிலும், ஓமலூர் வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04290-220224 அலைபேசிஎண் 94450-00553 என்ற எண்ணிலும், காடையாம்பட்டி வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04290-243569 அலைபேசி எண் 93840-94203 என்ற எண்ணிலும், மேட்டூர் வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04298-244050 அலைபேசிஎண் 94450-00552 என்ற எண்ணிலும், எடப்பாடி வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04283-222227 அலைபேசிஎண் 94450-00556 என்ற எண்ணிலும், சங்ககிரி வட்டத்திற்கு தொலைபேசிஎண் 04283-240545 அலைபேசிஎண் 94450-00554 என்ற எண்ணிலும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களின் தொலைபேசி எண்களுக்கு மழை வெள்ளம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ