)
Seeman Press Meet: சென்னை போரூர் அடுத்த சின்னப்போரூர் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மாயோன் திருவிழா இன்று (ஆகஸ்ட் 16) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, "சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மொத்தமாக 70 கோடி ரூபாய் இருந்தால் சம்பளம் வழங்கிவிடலாம். ஆனால் அதை செய்யாமல் தனியாருக்கு மாற்றுவது ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், "தனியார் நிறுவனத்திற்கு மாற்றிவிட்ட பிறகு சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்குவோம், மருத்துவ காப்பீடு வழங்குவோம், காப்பீடு திட்டங்கள் வழங்குவோம் என வாக்குறுதி கொடுப்பது எதற்கு? அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது" என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து தமிழ் சமுதாயத்தை திராவிட கட்சிகள் சாப்பாட்டிற்கு இல்லாதவர்களாகவே நடத்துவதாக சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தூய்மை பணியாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவிப்பது போல போலியான ஆட்களை தயார் செய்து நாடகமாடி உள்ளனர் என்றும் அரசு தரப்பை விமர்சித்தார்.
அந்த நாடகம் மேயர் பிரியா இயக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும், அதை தயாரித்தது அமைச்சர் சேகர் பாபு எனவும் ஆனால் இரண்டு பேருக்கும் அனுபவம் இல்லாததால் படம் தோல்வி அடைந்து விட்டதாகவும் சீமான் கிண்டல் அடித்தார். இவர்கள் அழைத்து வந்த கூலியும் தோற்றுவிட்டது, அந்த (நடிகர் ரஜினி நடித்த) கூலியும் தோற்றுவிட்டது என பேசினார். அந்த கூலியும் தோற்றுவிட்டது, இந்த கூலியும் தோற்றுவிட்டது என பேச அங்கு சிரிப்பலை எழுந்தது.
மேலும் பேசிய சீமான்"தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு ஆளுநருக்கும் பாஜகவுக்கும் தகுதி இல்லை. மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பாலியல் குற்றங்களைச் செய்துவிட்டு அவர்கள் இவ்வாறு பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. தமிழகத்தில் தற்போது இவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுவதற்கு காரணம் மக்கள் செய்த தவறுதான்.
பிறப்பு விகிதம் குறைந்துவிட்டதால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்ததாக கூறும் பள்ளி கல்வித்துறை, தனியார் பள்ளிகளில் எப்படி சேர்க்கை விகிதம் அதிகரிக்கிறது என்பதை கூற வேண்டும். அரசு பள்ளியை மூடும் கொடுங்கோலாட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது" என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ