சீமான் சொன்ன அந்த ஒரு வார்த்தை... குஷியில் இபிஎஸ்... கடுப்பில் விஜய் - என்ன மேட்டர்?

Tamil Nadu News: சீமான் சமீபத்தில் தெரிவித்த கருத்து அதிமுக தலைமையை குதூகலமாக்கிய அதே வேளையில், தவெக தலைவர் விஜய்யை கடுப்பாக்கி உள்ளது எனலாம். இதன் பின்னணியை இங்கு காணலாம்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : Mar 20, 2025, 06:48 PM IST
  • சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுகிறது.
  • திமுக கூட்டணி பலமாக உள்ளது.
  • அதிமுக பலமான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
சீமான் சொன்ன அந்த ஒரு வார்த்தை... குஷியில் இபிஎஸ்... கடுப்பில் விஜய் - என்ன மேட்டர்?

Tamil Nadu Political News: சீமானின் சமீபத்திய பேச்சு தான் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை வீசி வருகிறது. கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறி வந்த சீமான், இப்போது கூட்டணிக்கு தயார் என கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். அப்படி என்ன தான் நடக்கிறது தமிழக அரசியலில் என்பதை பார்க்கலாம்

Tamil Nadu Political News: சீமான் பேசியது என்ன?

சீமான் சமீபத்தில் மேடையில் பேசும் போது, 2021-ம் ஆண்டு பல இடங்களில் 300, 400 வாக்குகள் வித்தியாசத்தில்  திமுக வெற்றி பெற்றது என்றும், அந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 15 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றது என்றும், வரும் தேர்தலில் அப்படி நடக்காது என்றும் பேசி இருக்கிறார். இதன் மூலம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தூது சொல்கிறாரா சீமான் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து தான் தேர்தலை சந்திக்கும் என்று எப்போதும் கூறும் சீமான், இந்த முறை சற்று மனம் மாற காரணமும் உண்டு.

Tamil Nadu Political News: சீமான் பிளான் என்ன?

சமீபத்தில் அவர் வீட்டு வாசலில் சம்மன் ஒட்ட அதிகாரிகள் சென்ற போது, ஏற்பட்ட தகராறில் சீமான் மிகவும் அப்செட் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதிகாரம் இருந்திருந்தால், இந்த சூழலே ஏற்பட்டிருக்காது என்று வருந்தினாராம் சீமான். அதனால் இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலக்கில் தொகுதிகளை பெற்றால் கண்டிப்பாக சட்டப்பேரவைக்குள் நுழைந்துவிடலாம் என்று நினைக்கும் அவர், அதற்கான அஸ்திவாரத்தை அமைக்கத் தொடங்கியுள்ளார்.

மேலும் படிக்க | 'அதிகப் பிரசங்கி...' காட்டமாக பேசிய ஸ்டாலின் - வெளியே வந்து வேல்முருகன் சொன்னது என்ன?

Tamil Nadu Political News: பலமாகுமா அதிமுக கூட்டணி?

விஜய்யுடன் சீமான் கூட்டணி அமைப்பார் என்று ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால் கட்சி தொடங்கியதும், சீமானுக்கு விஜய் எதிர்பார்த்த மரியாதையை கொடுக்காததால், மனக்கசப்பு ஏற்பட்டது. அதோடு விஜய்யை கடுமையாக விமர்சித்தார் சீமான். இதனால் இருவரும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. தற்போதைய சூழலில், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுக்கு கூட்டணி பலம் தேவை. இப்போதைக்கு அதிமுகவுடன் இருக்கும் கூட்டணி தேமுதிக தான். அவர்களும் ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்குமா கிடைக்காதா என்ற அதிருப்தியில் இருப்பதால் இந்த கூட்டணி நீடிக்குமா என்பது தெரியாது.

Tamil Nadu Political News: விஜய்க்கு மிகப்பெரிய அணி

அதோடு பாமக, நாம் தமிழர் கட்சி மட்டுமே அதிமுகவிடம் கூட்டணிக்கு இருக்கும் சாய்ஸ். விஜய் தனித்து தான் தேர்தலை சந்திப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் விஜய்யுடன் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வாருங்கள் என்றும் அழைப்பு விடுக்கின்றனர் தவெகவினர். இதனால் தவெகவுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுகவுக்கு சிக்கல் இருக்கிறது. இந்த சூழலில் சீமான் கிரீன் சிக்னல் காட்டி இருப்பதால் அதிமுக அதை பயன்படுத்திக்கொள்ளும். இது விஜய்க்கு மிகப்பெரிய செக் தான். முதல் தேர்தலை தனித்து நின்று போட்டியிட்டு சொல்லிக்கொள்ளும் வெற்றியை பெறாவிட்டால் அது மிகப்பெரிய அடியாக விஜய்க்கு அமைந்துவிடும். 

அதிமுக - சீமான் இணைந்தால் விஜய் கூட்டணிக்கு சென்றாலும் கேட்கும் தொகுதிகள் கிடைக்காது. அதனால் சீமானின் இந்த பேச்சு விஜய்க்கு பாதிப்பு தான். விஜய்யின் கூட்டணிக்கு பாமக தான் மிஞ்சி உள்ளது. விசிக கூட்டணிக்கு வரும் என்று விஜய் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. சமீபத்தில் கூட நடிகர்கள் பின்னால் போக முடியாது என்று நெற்றியில் அடித்தது போல பேசி இருந்தார் திருமாவளவன். அவர் திமுகவுடன் தான் கூட்டணி என்பது திட்டவட்டமாகிவிட்டது.

Tamil Nadu Political News: வருங்காலத்தில் தெரியும்...

அதனால் நெருக்கடியில் விஜய் இருக்கிறார். சீமானின் இந்த மனமாற்றம் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகத்தை தரலாம். கடந்த தேர்தலில் பல தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் அதிமுக தோல்வியடைந்தது. ஆனால் 8 சதவீதம் வரை வாக்கு வங்கி வைத்திருக்கும் சீ்மான் கூட்டணிக்கு வந்தால் அதிமுகவுக்கு பலம் தான். அதனால் சீமான் என்ன முடிவு எடுப்பார்? விஜய்யும் சீமானும் அதிமுக உடன் இணைவார்களா என்பதெல்லாம் வரும் காலங்களில் தெரிந்துவிடும்.

மேலும் படிக்க | திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதா...? புள்ளிவிவரங்களுடன் முதல்வர் மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News