Seeman: முதல்வர் ஆசையில் சீமான்.. விசாரணைக்கு பிறகு சீமான் சொன்னது என்ன?

Seeman Press Meet: நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானிடம் சுமார் 1.15 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து அளித்த விளக்கத்தை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 1, 2025, 01:07 AM IST
  • முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - சீமான்
  • அவர் விரும்பியே உறவு வைத்துக்கொண்டார், பிடிக்கவில்லை பிரிந்துவிட்டோம் - சீமான்
  • அது காதல் இல்லை கன்றாவி - சீமான்
Seeman: முதல்வர் ஆசையில் சீமான்.. விசாரணைக்கு பிறகு சீமான் சொன்னது என்ன?

Seeman Press Meet: நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், வளசரவாக்கம் காவல்துறையினர் சீமானிடம் சுமார் 1.15 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சீமான், கடந்த முறை தன்னிடம் ஆய்வாளர் ஒருவர் 3 மணிநேரம் கேட்ட அதே பழைய கேள்விகளை, புதிய ஆய்வாளர் தற்போது மீண்டும் கேட்டுள்ளார் என்றார்.

Add Zee News as a Preferred Source

Seeman Press Meet: 'விரும்பி உறவுவைத்துக்கொண்டவர் அவர்'

தனக்கும் அந்த நடிகைக்கும் ஒரு ஆண்டில் 6-7 மாதங்களே பழக்கம் இருந்தது என்றும் அதற்கு பிறகு 2008-09இல் சிறைக்குச் சென்றுவிட்டேன் என்றும் சீமான் கூறினார். அந்த நடிகையுடன் 6 மாதங்கள் மட்டுமே பழக்கம் இருந்தது என்றும் அவரின் விருப்பத்தின் பேரிலேயே உறவில் இருந்ததாகவும், பிடிக்கவில்லை என்ற பின்னர் இருவரும் பிரிந்துவிட்டோம் என்றும் சீமான் விளக்கம் அளித்தார்.

Seeman Press Meet: 'வீண் பழி... திருமணமாகியே 14 ஆண்டுகள் ஆகிறது'

மேலும்,"நான் ஏதோ அவரை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை சேர்த்ததாக கூறுகின்றனர். அதை சொன்னால் சிலர் முகம் சுழிக்கிறார்களாம். திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது, என்னை நோக்கி இத்தனை ஆண்டுகளாக இந்த பழியை போட்டு வருகிறீர்கள். என்னையும், எனது குடும்பத்தையும் கடித்து குதறுகிறீர்கள். எனக்கு விவரம் தெரிந்த வயதில் மகன் இருக்கிறான், அவனுக்கு இதெல்லாம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என யோசிக்க மாட்டீர்களா... நான் எனது ஆதங்கத்தை சொன்னால் சிரிக்கிறீர்கள். இது என்ன நியாயம்" எனவும் சீமான் ஆதங்கப்பட்டார். மேலும், அந்த நடிகைக்கு காதல் இருந்திருந்தால் இப்படி பொதுவெளிக்கு வந்து பேசியிருப்பாரா... இது காதல் இல்லை கன்றாவி என சீமான் கடுமையாக பேசினார்.

Seeman Press Meet: 'ஸ்டாலின் பேசி முடித்த பின்னரே வர சொன்னார்கள்'

வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தாமதமாக வந்தது ஏன் என்ற கேள்விக்கு,"முதலில் நான் மாலை 6 மணிக்கு வருகிறேன் என்றேன். அதன்பின் வழக்கறிஞர்களிடம் இரவு 8 மணிக்கு வரும்படி கூறினர். அதன்பின் 10 நிமிடம், 10 நிமிடம் எனக் கூறி இரவு 10 மணிக்கு வரவைத்தனர். காரணம், பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்ததால், ஊடக கவனம் என்மீது திரும்பிவிடக்கூடாது என்பதற்காக என்னை தாமதமாக வரவைத்துள்ளனர்" என்றார்.

Seeman Press Meet: 'கலைஞர் மகன் என்னை முதல்வராக்குவார்'

மேலும், "மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தன்னை கைது செய்தே தலைவராக்கினார். தற்போது கலைஞரின் மகன் என்னை முதல்வராக்கப் போகிறார்" என சீமான் பேசினார். தன்னை அசிங்கப்படுத்துபவர்களுக்கே விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றும் புதிய கேள்விகள் இல்லை என்றும் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்றும் கூறியிருப்பதாக சீமான் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் அரசின் தலையீடு இருப்பதாகவும், காவல்துறையினருக்கு அரசு அழுத்தம் கொடுக்கிறது என சீமான் குற்றஞ்சாட்டினார். திமுகவில் இருப்பவர்கள் யாருக்காவது இதுகுறித்து (பாலியல் வழக்கு) கேள்வி எழுப்ப அருகதை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 

Seeman Press Meet: அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

மேலும், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சீமான்,"மாண்புமிகு தமிழக முதல்வர் அப்பா ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்றார். அதுமட்டுமின்றி, 3 மாதங்கள் கால அவகாசம் இருக்கும் நிலையில், 3 நாள்களில் விசாரணையை முடிக்க நினைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

Seeman Press Meet: அமல்ராஜ் காவலாளி இல்லை

நேற்று அளிக்கப்பட்ட சம்மனை கிளித்த சம்பவம் குறித்து பேசிய சீமான்,"சம்மனை வீட்டிலேயே கொடுத்திருக்கலாம். ஆனால், வீட்டில் யாரும் இல்லை என கூறுகின்றனர். வீட்டில்தான் எனது மனைவி இருந்தார், என்னிடம் போன் செய்திருக்கலாம். முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் மற்றும் தம்பி சுபாகரை காவலர்கள் தாக்கியது கண்டனத்திற்குரியது. சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் காவல்துறையினர், கிழித்த உடன் எதற்கு நீலாங்கரை காவல்துறையினர் வருகின்றனர்? சம்மனை கிழிக்கக்கூடாது என ஏதும் சட்டம் இருக்கிறதா" என்றும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், அமல்ராஜ் காவலாளி இல்லை என்றும் முன்னாள் ராணுவ வீரரான அவர் தன் மீது உண்டான பாசத்தில் தன்னார்வமாக தனக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார் என்றும் அவர் பேசினார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2025: மாணவர்களுக்கு 1000 ரூபாய் - வருகிறது நல்ல செய்தி

மேலும் படிக்க | மொழிப்போர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேலும் படிக்க | சீர்காழி பாலியல் வழக்கு: 'மூன்றரை வயது சிறுமி மீதும் தவறு...' ஆட்சியரின் சர்ச்சை பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News