)
MK Stalin O Panneerselvam Meeting: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
அதிமுக உரிமைமீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனியில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைடந்தார். அப்போது, அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை.
அதன்பின், பாஜகவுடன் அதிமுக இணைந்ததும் ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். தொடர்ந்து, அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தமிழகம் வந்தபோது கூட இவரை தனியாகச் சந்திக்கவில்லை. இதனால், ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து அதிருப்தியில் இருந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இன்று (ஜூலை 31) அறிவித்தது.
இன்று மதியம் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது மாலையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க அவரது ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். குறிப்பாக அவர் காரில் வருகை தந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கு வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஓ. பன்னீர்செல்வம் பழக்கூடையுடன் வருகை தந்தார். முன்னதாக, இன்று காலை நடைபயிற்சியின் போதும் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்திருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணன் @OfficeOfOPS அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை இல்லத்தில் சந்தித்து இன்று நலம் விசாரித்த போது, நாம் உடனிருந்தோம். அண்ணன் அவர்களுக்கும் உடன் வருகை தந்திருந்த நிர்வாகிகளுக்கும் எனது அன்பும், நன்றியும்! pic.twitter.com/pcAXp4kM3x
— Udhay (@Udhaystalin) July 31, 2025
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் - ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடையோன சந்திப்பு அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நிமிட சந்திப்புக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், "முதலமைச்சர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே வந்தேன். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் முதலமைச்சரை சந்தித்தேன். முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் நான் அரசியல் பேசவில்லை" என்றார்.
தொடர்ந்து, திமுக உடன் கூட்டணி வைத்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்றார். அதுமட்டுமின்றி, நடிகர் விஜய்யின் தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, தானும் அவரிடம் பேசவில்லை, அவரும் தன்னிடம் பேசவில்லை என்றார். முன்னதாக, இன்று மதியம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியபோது அதிமுக உரிமைமீட்பு குழுவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் பேசுகையில், யாரை வீழ்த்த வேண்டும் என்பதல்ல, யாரை வாழ்த்த வேண்டும் என்பதே நோக்கம் என பேசியிருந்தார். இதனால், வருங்காலத்தில் ஓபிஎஸ் திமுக உடன் கைக்கோர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ