)
Ration Card : தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் யார் யார் வீடுகளுக்கு எந்த தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் மாந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயனாளிகளின் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வநியோகிக்கப்படுகிறது. ஒருவேளை அந்த நாட்களில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்ய முடியவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர், பொதுவிநியோக திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் முடிவு செய்யும் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.
அக்டோபர் மாதம் ரேஷன் பொருட்கள் வநியோகம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதம் 05-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 06-ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் 07 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய தேதிகளில் 70 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி
குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைத்தாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற மாவட்டங்களில் எந்த தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்ற தேதியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள்
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தாயுமானவர் திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படுமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. எல்லோருக்கும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படாது. 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, இத்திட்டத்துக்கான தகுதிகளை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதியில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம், பொதுவிநியோக திட்ட குறைதீர் முகாம் ஆகியவற்றில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதுவரை இத்திட்டம் குறித்து தெரியாதவர்கள், அறிந்துகொண்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் வயது முதிர்ந்தோருக்கு சொல்லவும்.
ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால்?
ஒருவேளை குறிப்பிட்ட தேதியில் ரேஷன் பொருட்களை வீடு தேடி வரும்போது வாங்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கலாம். அதற்கும் அரசு ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறது. முதியவர்களுக்கு பதிலாக அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது வேறு யாரேனும் அடுத்த நாள் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கலாம். ஆனால், அவரும் இந்த முதியவர்களுகாக வாங்குகிறேன் என பிரதிநிதி படிவத்தை நிரப்பிக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
முக்கியமான இன்னொரு தகவல்
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நடக்கும் குறைதீர்வு முகாம்களில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதற்கான விண்ணப்பத்தைக் கொடுக்கலாம். மாவட்ட ஆட்சியர் உங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ